ஜெய்ப்பூர்: ஏர் இந்தியா விமானத்தில் தீ: 170 பயணிகள் உயிர் தப்பினர்
இம்பால்: ஜெய்ப்பூரில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் இறக்கையில் திடீரென்று தீ பற்றியதால் பயணிகள் அச்சமடைந்தனர். எந்த வித ஆபத்தும் இன்றி விமானம் தரையிறங்கியதால் அதில் பயணம் செய்த பயணிகள் உயிர் பிழைத்தனர்.
மணிப்பூர் தலைநகர் இம்பாலிலிருந்து ஞாயிறன்று டெல்லி நோக்கி ஏர் இந்தியா விமானம், 170 பயணிகளுடன் கிளம்பியது. இம்பாலிலிருந்து சுமுகமாக பயணம் செய்து 4 மணி நேரத்தில் டெல்லி வந்தடைந்தது. ஆனால், தரையிரங்க வேண்டிய நேரத்தில் கடும் பனி மூட்டம் காரணமாக விமானத்தை ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யுமாறு டெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் விமானிக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து அங்கிருந்து ஒரு மணி நேரத்தில் விமானம் ஜெய்ப்பூர் சென்றடைந்தது. அப்போது விமானம் தரையிறங்கப் போவதாகவும், பயணிகள் அனைவரும் சீட் பெல்ட்களை அணிந்து கொள்ளுமாறும் பணிப்பெண்கள் உத்தரவிட்டனர். ஆனால், விமானம் தறையிறங்கிய சமயத்தில் விமானத்தின் டயரில் தீப்பிடித்தது. விமானத்தின் ஒரு பக்க சிறகும் சேதமடைந்தது.
கிட்டத்தட்ட விமானம் இரண்டாக பிளப்பது போல் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. பயணிகள் அனைவரும் கடும் நடுக்கம் அடைந்து தாங்கள் மரணத்தின் விளிம்பில் நின்றிருப்பதாக கருதிய நிலையில், விமானம் அமைதியாக ஓடுபாதையில் நின்றது.
கடவுளின் கருணையால் உயிர் பிழைத்தாக விமானி பயணிகளிடம் தெரிவித்தபோது, பயணிகள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள் அனைவரும் நீண்ட நேரம் கழித்தே அதிர்ச்சியிலிருந்து மீண்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications