ஒருவர் மட்டுமே தப்பினார்.. அகமதாபாத் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 241 பேர் பலி.. பெரும் சோகம்

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பயணிகள் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது.. விமானம் புறப்படும் போது கட்டுப்பாட்டை இழந்து அந்த விமானம் விபத்தில் சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 232 பயணிகள், 10 பணியாளர்கள் என பயணித்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். 241 பேர் இறந்தனர்.

பொதுவாகவே விமானங்களில் எப்போதும் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படும்.. இதன் காரணமாகவே விமான விபத்துகள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால், அதையும் தாண்டி சில நேரங்களில் எதிர்பாராத விபத்துகள் நடந்துவிடும். அப்படி ஏற்படும் போது அது மிகப் பெரிய அழிவையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்துவதாகவே இருக்கும். அதுபோன்ற ஒரு விபத்து தான் இப்போது நடந்துள்ளது.

Ahmedabad Plane Crash

விமான விபத்து

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பயணிகள் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது.. விமானம் புறப்படும் போது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. புறப்படும்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம், கீழே விழுந்துள்ளது. இது குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு நேரடியாகச் செல்லும் ஏர் இந்தியா ட்ரீம்லைனர் ரக விமானம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

விமானம் பிற்பகல் 1.10 மணியளவில் புறப்பட்டுள்ளது. சில நிமிடங்களில் விமானம் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து மதியம் 1.30 மணியளவில் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. இது தொடர்பான பதற வைக்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

விமானத்தில் 242 பேர்

இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்கள் என மொத்தம் 242 பேர் உள்ளே இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த பயணிகளின் கதி என்ன என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அகமதாபாத் விமான நிலையத்தின் 2வது முனையத்தில் இருந்து விமானம் புறப்பட்டுள்ளது. மதியம் 1.38 மணியளவில் விமானம் புறப்பட்ட நிலையில், சில நிமிடங்களில் விமானம் விபத்திற்குள்ளானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தனது விமானம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளதை ஏர் இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. இப்போது அங்கு என்ன நிலைமை என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக ஏர் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் விபத்திற்கு என்ன காரணம் என்பது உள்ளிட்ட தகவல்கள் இப்போது வரை வெளியாகவில்லை.

மீட்பு பணிகள்

இதற்கிடையே விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து மிகப் பெரியளவில் கரும்புகை வெளியாகியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்பு படை அதிகாரிகள் தீயை அணைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் மற்றொரு பிரச்சினை என்னவென்றால் அந்த விமானம் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்துள்ளது.. இதனால் பாதிப்புகள் அதிகமாக இருக்குமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. விமானம் அருகே இருந்த குடியிருப்பு மற்றும் மாணவர் விடுதியில் மோதிய நிலையில், அங்கும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

அனைவரும் உயிரிழப்பு

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+