தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் சீன பயணம் திடீர் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சீனா செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தத நிலையில், அவரது பயணம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா-சீனா இடையே நிலவி வரும் எல்லை பிரச்சனை குறித்து அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜீச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சீனா செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பதன்கோட் விமானதளத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அஜித் தோவலின் சீன பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு, தோவல் ஆலோசனை தேவைப்படுவதால், அவர் சீனா செல்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. தோவலின் பயணத் திட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications