ஆர்.எஸ்.எஸ். தலைவரை தொடர்புபடுத்த நெருக்கடி தந்தார் ஷிண்டே?அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் பரபரப்பு!

2007ஆம் ஆண்டு அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்துக்கு ஹிந்து இயக்கத்தினருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. ஹிந்து இயக்கத்தைச் சேர்ந்த அசீமானந்தா, பவேஸ் படேல், தேவேந்திர குப்தா, லோகேஷ் சர்மா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஹிந்து இயக்கத் தலைவர்களை தொடர்புபடுத்தி வாக்குமூலம் தருமாறு காங்கிரஸின் திக்விஜய் சிங், மத்திய அமைச்சர்கள் ஆர்.பி.என்.சிங், ஸ்ரீபிகராஷ் ஜெய்ஸ்வால் ஆகியோர் நெருக்கடி கொடுத்தனர் என்று பவேஸ் படேல் முன்பு கூறியிருந்தார்.
தற்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மூத்த தலைவர் இந்த்ரேஸ் குமாரையும் இந்த வழக்கில் தொடர்பு படுத்தி வாக்குமூலம் தருமாறு உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தமக்கு நெருக்கடி கொடுத்ததாக தேசிய புலனாய்வு ஏஜென்சியின் சிறப்பு நீதிமன்றத்துக்கு பவேஸ் படேல் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. நிராகரித்துள்ளது. எந்த ஒரு நபரிடமும் நெருக்கடி கொடுத்து வாக்குமூலம் வாங்கவில்லை என்றும் அந்த ஏஜென்சி தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் ராம் மாதவோ, ஹிந்து இயக்கங்கள் மீது குற்றம்சாட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்கில் தொடக்கம் முதலே செயல்பட்டு வருகின்றனர். எந்த ஒரு பாரபட்சமற்ற விசாரணையே எங்களுக்குத் தேவை என்றார்.












Click it and Unblock the Notifications