மோடி போட்டியிட்ட வாரணாசியை மின்வெட்டு இல்லா மாவட்டமாக்க உ.பி. முதல்வர் அகிலேஷ் உத்தரவு
வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியை மின்வெட்டு இல்லா மாவட்டமாக்க உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றார். அதன் பின்னர் வதோதரா எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் வாரணாசியை மின்வெட்டு இல்லா மாவட்டமாக அறிவிக்கக் கோரி தெற்கு வாரணாசியில் இருந்து 7 முறை தேர்வு செய்யப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.வான ஷியாம்தியோ ராவ்சவுத்ரி கடந்த மாதம் 27ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்தார்.
அவரை சந்தித்து பேசிய பிறகு வாரணாசியி மின்வெட்டு இல்லா மாவட்டமாக்க வேண்டும் என்று உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
மே 12ந் தேதி வாக்குப்பதிவு நடப்பதற்கு முந்தைய நாள் வாரணாசி மற்றும் ஆசம்கரில் 18 மணிநேரத்திற்கு பதிலாக 22 மணிநேரம் மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டது. சமாஜ்வாடி கட்சி தலைவரான முலாயமின் தொகுதியான ஆசம்கரில் 22 மணிநேரம் மின்சாரம் வழங்கப்பட்டபோதிலும் வாரணாசியில் மின்வெட்டு இருந்தது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலி மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர்களின் தொகுதியான இடாவா, கன்னௌஜ் உள்ளிட்ட தொகுதிகள் மின்வெட்டு இல்லா தொகுதிகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications