ஹரியானா தோல்வியால் அதிருப்தி? உ.பி.யில் காங்கிரஸை கழட்டிவிட போகிறதா சமாஜ்வாடி.. அகிலேஷ் யாதவ் பதில்
லக்னோ: ஹரியானா மற்றும் காஷ்மீர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்ததால் அக்கட்சியின் மீது சமாஜ்வாடி அதிருப்தியில் இருப்பதாகவும், எனவே கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. இதுபற்றி செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த அகிலேஷ் யாதவ், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணி தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
அண்மையில் நடந்து முடிந்த ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் கூறின. ஆனால் கருத்துக்கணிப்புகளை மீறி பாஜக வெற்றி பெற்றது. அதேபோல் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் தேசிய மாநாடு கட்சி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும், காங்கிரஸ் அங்கு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.. ஆனால் தனித்து போட்டியிட்ட பாஜக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக ஜம்மு பிராந்தியத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், அந்த கட்சி மீது இந்தியா கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சியான சமாஜ்வாதி அதிருப்தியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு பதில் அளித்த அகிலேஷ்யாதவ், கூட்டணி தொடரும் என்று கூறி, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
உத்தரபிரதேசத்தில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட 9 எம்.எல்.ஏ.க்கள் வெற்றிப் பெற்று எம்.பியாகி உள்ளார்கள். இதனால் அந்த 9 தொகுதிகள் தற்போது காலியாகி உள்ளன. இதேபோல் சிறைதண்டனை காரணமாக சமாஜ்வாடி எம்.எல்.ஏ. இர்பான் சோலங்கி தகுதியிழப்புக்கு ஆளாகினார். இதனால் அவர் எம்எல்ஏவாக இருந்த சிசாமு தொகுதியும் காலியாக உள்ளது. ஆக மொத்தம் உத்தரப்பிரதேசத்தில் 10 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறபோகிறது. இதற்கான அறிவிப்பினை தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன,
2027 சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படும் இந்த இடைத்தேர்தலில் உத்தரபிரதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாடியும் காங்கிரசும் இணைந்து போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தன. மேலும் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 5 தொகுதிகளை காங்கிரஸ் கோரியது. எனினும் இடைத்தேர்தல் நடைபெறும் 10 தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சமாஜ்வாடி கட்சி நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தனது தந்தையும், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அகிலேஷ் யாதவ், “இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி இருக்கிறது என்பதை மட்டும் சொல்ல விரும்புகிறேன். காங்கிரசுடனான சமாஜ்வாடியின் கூட்டணி தொடரும்” என்று திட்டவட்டமாக தெரித்தார். அப்போது அவரிடம் ஹரியானாவில் காங்கிரசின் தோல்வி குறித்து கேட்டபோது, “இப்போது அரசியல் குறித்து விவாதிக்க நேரமில்லை. நாம் மீண்டும் சந்திக்கும்போது இதுப்பற்றி விவாதிப்போம்” என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.
-
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications