மதுவிலக்கு கடினமானது.. குறைவாக மது அருந்துங்கள்: உ.பி. முதல்வர் அகிலேஷ் அட்வைஸ் !
லக்னோ: மதுவிலக்கு முடிவை அவசரமாக எடுக்க முடியாது, குறைவாக மது அருந்துங்கள் என்றே இப்போதைக்குக் கூற முடியும் என்று உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் முழு மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளார் மாநில முதல்வர் நிதிஷ்குமார். இதை அடுத்து அதன் அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்துக்கு மதுபிரியர்கள் படை எடுப்பதால் அங்கு மதுவிற்பனை அதிகரித்துள்ளது.

இதனிடையே பீகாரின் மற்றொரு எல்லையில் அமைந்துள்ள நம் நாட்டின் அண்டை நாடான நேபாளத்திலும் மது விற்பனை அதிகரித்துள்ளது. இந்தப் பகுதியில் உருவான திடீர் குடிசைகளில் நேபாளத்தில் தயாரிக்கப்படும் மது விற்பனை செய்யப்படுகிறது.
இதை அருந்து பீகார் வாசிகள் தினம்தோறும் அங்கு படைஎடுத்த வண்ணம் உள்ளனர். நேற்று முன்தினம் எல்லைதாண்டி நேபாள நாட்டுக்கு மதுஅருந்தச் சென்ற 70 இந்தியர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் கூறும்போது, உத்தரப்பிரதேசத்தில் முழு மதுவிலக்கு முடிவை உடனடியாக எடுப்பது சாத்தியமல்ல, குறைவாக மது அருந்துங்கள் என்றே இப்போதைக்கு அறிவுரை வழங்க முடியும்.
கரும்பு விவசாயிகளின் நலன், மதுக்கடைகளில் பணியாற்றும் லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும் இது. எனவே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
முழு மதுவிலக்கால் மாநிலத்துக்கு ஏற்படும் வருவாய் இழப்பை பிறவற்றின் மூலம் ஈடுகட்ட முடியும் என்று பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கூறியதற்கு பதில் அளிக்குமாறு அகிலேஷ் யாதவ் இதனைத் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications