அகிலேஷ் யாதவுக்கு அவரோட சித்தி சூனியம் வச்சுட்டாங்களாமே!
லக்னோ: உ.பி அரசியல் புயல் இப்போதைக்கு ஓயாது போல. முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும், அவரது தந்தையும் சமாஜ்வாடி கட்சியின தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கும் இடையிலான பூசலை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒரு எம்.எல்.சி. முலாயமுக்கு எழுதியுள்ள கடிதம் அமைந்துள்ளது.
முலாயம் சிங்கின் 2வது மனைவியான சாதனா, அகிலேஷுக்கு சூனியம் வைத்து விட்டதாக புதுமுக எம்.எல்.சியான உதய்வீர் சிங் என்பவர் முலாயமுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதால் உ.பி. அரசியல் வட்டாரம் பரபரப்படைந்துள்ளது.

சித்தியால்தான் அகிலேஷ் பல பிரச்சினைகளை சந்தித்து வருவதாக கூறியுள்ள உதய்வீர் சிங், முலாயம் சிங் உடனடியாக கட்சியை அகிலேஷ் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒரு குண்டைத் தூக்கி வீசியுள்ளார். இந்தக் கடிதத்தால் சமாஜ்வாடிக் கட்சி மீண்டும் கலகலத்துப் போய்க் கிடக்கிறது.
இந்தக் கடிதம் குறித்து சிங் விளக்குகையில் இது தனிப்பட்ட கடிதம். நான் யாரையும் குறை சொல்லவில்லை. நடந்ததையும், நடப்பதையும்தான் சுட்டிக் காட்டியுள்ளேன். கட்சியினர் கருதுவதைத்தான் நான் சொல்லியுள்ளேன் என்று கூறியுள்ளார்.
முலாயம் சிங்கின் 2வது மனைவிதான் சாதனா. இவர் முலாயமின் தம்பி சிவபால் யாதவுடன் சேர்ந்து கொண்டு அகிலேஷுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக ஏற்கனவே ஒரு பேச்சு உண்டு. இதைத்தான் தற்போது கடிதம் மூலமாக சுட்டிக் காட்டியுள்ளார் உதய்வீர் சிங் என்கிறார்கள்.
அகிலேஷுக்கு, சாதனா சூனியம் வைத்து விட்டதாக உதய்வீர் கூறியுள்ளதுதான் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மேலும் சிவபால் யாதவும், அகிலேஷுக்கு அதிகரித்து வரும் செல்வாக்கைக் கண்டு பொறாமைப்படுவதாகவும் உதய்வீர் சிங் கூறியுள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு அகிலேஷுக்கு எதிராக செயல்படுவதாகவும் உதய்வீர் கூறியுள்ளார்.
உடனடியாக சிவபால் யாதவை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும். அகிலேஷிடம் கட்சியைக் கொடுக்க வேண்டும் என்றும் உதய்வீர் சிங் கூறியுள்ளார்.
ஆனால் இதற்குக் கடும் கணடனம் தெரிவித்துள்ள சிவபால் யாதவ் ஆதரவாளரான அஷு மாலிக் கூறுகையில், 500 ஓட்டு வாங்கக் கூட வக்கில்லாதவர்கள்தான் இப்படிப்பட்ட கடிதத்தை எழுதுவார்கள் என்றார் கோபமாக.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications