மது போதை வஸ்தே இல்லையாம்: சொல்கிறார் பஞ்சாப் சுகாதாரத் துறை அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
சன்டிகர்: மது ஒன்றும் போதை அளிக்கும் பொருள் இல்லை என்று பஞ்சாப் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுர்ஜித் குமார் கியானி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் சுர்ஜி குமார் கியானி. அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின்போது அவர் கூறிய ஒரு விஷயம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

பேட்டியின்போது அவர் கூறுகையில்,
மது போதை அளிக்கும் பொருள் இல்லை என்றே நினைக்கிறேன். அதனால் மதுவை போதை வஸ்து என்று கூறக் கூடாது. ராணுவத்திலும், பார்ட்டிகளிலும் மது அருந்துகிறார்கள்.
மதுவை தயாரிக்க அரசே உரிமம் வழங்குகிறது. மதுக் கடைகள் ஏலத்திற்கு விடப்படுகின்றன. அவை எல்லாம் நடக்கும் வரை மதுவை போதை வஸ்து என்று கூறக் கூடாது என்றார்.
பஞ்சாபில் போதைப் பொருட்களுக்கு பலர் அடிமையாகி வரும் நிலையில் கியானி இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications