கேரளாவில் விரைவில் “பூரண மதுவிலக்கு” – உம்மன் சாண்டி அறிவிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் மதுவிலக்கு கொஞ்சம் கொஞ்சமாக அமல்படுத்தப்பட உள்ளது.
மேலும், அடுத்த பத்து ஆண்டுகளில் கேரளா பூரண மதுவிலக்கு பெற்ற மாநிலமாக இருக்கவேண்டும் என்ற இலக்கை அடைவோம் என்றும் அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், அரசுக்கு வருமானத்தைவிட மக்களின் நலனே முக்கியம் என்றார்.

பார்களுக்கான உரிமம்:
"புதிய பார்களுக்கான உரிமங்கள் எதுவும் இனிமேல் வழங்கப்படமாட்டாது. ஏற்கனவே 400க்கும் மேற்பட்ட பார்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் 8 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்.

மக்கள்தான் முக்கியம்:
இதை பார்த்தால் வரும் காலங்களில் மக்களின் வாழ்கைத்தரம் மோசமாகிவிடும். அரசுக்கு வருமானத்தைவிட மக்களே முக்கியம். அதே நேரத்தில் மதுவை அதிரடியாக தடை செய்தால் மக்கள் மட்டுமல்ல அரசும் நிலை தடுமாறும் நிலமை வரும். அதனால் படிப்படியாக மதுவிலக்கு அமலுக்கு வரும்" என்று அவர் மேலும் கூறினார்.

7500 கோடி வருமானம்:
கேரள மாநிலத்தின் கடந்த நிதியாண்டில் 9,300 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மீதான வரிகள் மூலம் அரசுக்கு ரூபாய் 7,500 கோடி கிடைத்துள்ளது.

வருவாய் இழப்பு கவலை இல்லை:
இதனை அக்கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்ட உம்மன் சாண்டி, இருப்பினும் மக்கள் நலனைகருத்தில்கொண்டு, மதுவிற்பனையின் மீதான வரி மூலம் கிடைக்கும் வருவாயை இழக்க அரசு தயாராகி வருவதாகவும், மதுவினால் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பை அரசு உணர்ந்துள்ளதாகவும் கூறினார்.

விற்பனை அளவு குறைப்பு:
மேலும் மதுவிலக்கை அமல்படுத்துவதன் முதல்கட்ட நடவடிக்கையாக, மதுபாட்டில்களின் விற்பனை அளவை குறைக்கவும், மக்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உரிமம் வழங்கப்படவில்லை:
கேரளாவில் 752 பார்கள் மற்றும் ஓட்டல்களிலும், 383 அரசு மதுபான விற்பனைக் கூடங்களிலும் மதுவிற்பனை செய்யப்படுகிறது. உம்மன் சாண்டி அரசு, கடந்த 2011 மே மாதம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து புதிய மதுவிற்பனை கடைகள் தொடங்க உரிமங்கள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் எப்போது?:
படிப்பில் மட்டுமல்ல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்துவதிலும் கேரளா முதலிடத்தில் உள்ளது.பக்கத்து மாநிலமான கேரளாவில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்களும், நந்தினி போன்றவர்களும் பூரண மதுவிலக்கிற்காக போராடி வந்தாலும் தமிழக அரசு டாஸ்மாக்கை ஒழிப்பதாய் இல்லை.

யோசிக்குமா தமிழக அரசு:
செய்வீர்களா என்று கேட்பதை நிறுத்திவிட்டு தமிழக முதல்வர் மதுவிலக்கை அமல்படுத்தும் திட்டத்தின் மூலம் மக்களுக்கு நல்லது செய்தால் நன்றாக இருக்கும்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications