பொது சிவில் சட்டம்... ஒரு சமூகத்துக்கு எதிரான போர்... முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் எதிர்ப்பு
டெல்லி: பொது சிவில் சட்டம் குறித்த ஆலோசனைகள் பெறும் மத்திய சட்ட ஆணையத்தின் முயற்சிகளை அனைத்திந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் மற்றும் பிற முஸ்லிம் அமைப்புகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. மத்திய அரசு ஒரு சமூகத்துக்கு எதிராக தொடுக்கும் போர் இது என்றும் அது எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து புதுடெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரிய பொதுச்செயலாளர் வாலி ரெஹ்மானி கூறியதாவது:

மக்களை ஒரே விதமாக மாற்ற முயலும் இந்தப் பொது சிவில் சட்டம், நாட்டின் பன்முகத்துவம் மற்றும் கலாச்சார தனித்துவங்களுக்கு அச்சுறுத்த உள்ளது. பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் அது அனைவரைக்கும் எதிரான ஒரு செயலாக மாறும். எல்லோரையும் ஒரே மாதிரியானவர்களாக காட்ட எடுக்கப்படும் முயற்சி தோல்வியையே தழுவும். இது நாட்டு நலனுக்கு நல்லதல்ல. மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் தோல்வி அடைந்து வருகிறது. அதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இதுபோன்ற முயற்சிகளை செய்து வருகிறது. அதனால், அரசு இந்த முயற்சியைக் கைவிட வேண்டும். பொது சிவில் சட்ட முயற்சிகளை கைவிடவில்லை எனில் எங்களது எதிர்கால நடவடிக்கைகள் என்ன என்பதை நாங்கள் முடிவெடுப்போம். இப்போதைக்கு முஸ்லிம் மக்களிடையே நாங்கள் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் வாலி ரெஹ்மானி கூறினார்.
மேலும், ஜமையது உலிமா-ஹிந்த் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி "மூன்று முறை தலாக் கூறும் நடைமுறையை நீக்க நாங்கள் விரும்பவில்லை. பிற சமூகத்தினரிடையே அதிகமாக விவாகரத்துகள் நடைபெறுகின்றன. முஸ்லிம்களை விட இந்துக்களிடையே இருமடங்கு விவாகரத்துகள் அதிகமாக உள்ளன" என்று தெரிவித்தார்.
முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மை மக்கள், சமூகக் குழுக்கள், என்.ஜி.ஓ.க்கள், அரசியல் கட்சிகள், அரசு முகமைகள், ஆகியோரிடம் மத்திய சட்ட வாரியம் கேள்விகளை தயாரித்து அளித்து பொது சிவில் சட்டம் குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு முறையிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications