"நள்ளிரவு 3 மணிக்கு ஏன்.." பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை கேள்வி எழுப்பிய அலகாபாத் ஐகோர்ட்
பிரயாக்ராஜ்: பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தொடர்ந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், அந்த நபருக்கு ஜாமீன் வழங்கியது. மேலும், இந்தச் சம்பவம் நடக்கப் பாதிக்கப்பட்ட பெண் தான் பொறுப்பு என்பது போல நீதிமன்றம் கூறிய கருத்துகளே இப்போது விவாதமாக மாறியுள்ளது.
நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சட்ட ரீதியாகவும் பெண்களுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதையும் தாண்டி சில வழக்குகளில் நீதிபதிகள் கூறும் கருத்துகள் விவாதமாகிவிடும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கு
அதாவது பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், அப்போது பாதிக்கப்பட்ட பெண் குறித்து ஐகோர்ட் நீதிபதிகள் சொன்ன கருத்து இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் நன்கு படித்தவராக இருக்கும் போதிலும் அவர் தன்னைத் தானே பிரச்சனைக்கு அழைத்துக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்ட நிஷ்சல் சந்தக்கிற்கு ஜாமீன் வழங்கி நீதிபதி சஞ்சய் குமார் சிங், பெண்ணின் குற்றச்சாட்டுகள் உண்மை என்று வைத்துக் கொண்டாலும் கூட அந்த சம்பவத்திற்கு அவரும் பொறுப்பு என்று கருத வேண்டி இருப்பதாகவும் கூறினார். அந்த பெண் முதுகலைப் பட்டம் படித்து வரும் மாணவி என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, இதனால் அவரது செயலினால் ஏற்படும் தாக்கத்தை அவர் புரிந்து கொள்ளும் அளவுக்குத் திறன் கொண்டவர் என்றும் குறிப்பிட்டார்.
என்ன நடந்தது
அந்தப் பெண் 2024ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி இது தொடர்பாகப் புகாரளித்துள்ளார். அந்த பெண் அளித்திருந்த புகாரில், இரண்டு நாட்களுக்கு பாரில் மது குடித்த போது தன்னை உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்ற சந்தக் என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டினார். தான் எதிர்க்க முடியாத அளவுக்குக் குடிபோதையில் இருந்ததாகவும் அந்த பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த இளைஞன் வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்கலாம் என்று நம்பி அவருடன் சென்றதாகவும் இருப்பினும் அதற்குப் பதிலாக, இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்குதான் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் சஞ்சய் குமார் சிங் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
பாதிக்கப்பட்ட பெண் தான் பொறுப்பு
இருப்பினும், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி பாதிக்கப்பட்ட பெண்ணின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினார். அந்த பெண் சுயவிருப்பத்தின் பெயரிலேயே பாரில் உட்கார்ந்து மது அருந்தியதாகவும் அதிகாலை 3 மணி வரை அங்கேயே இருந்ததாகவும் அலகாபாத் ஐகோர்ட் குறிப்பிட்டுள்ளது. அதன் பிறகும் யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவருடன் அந்த பெண்ணே தான் சென்றார் என்றும் குறிப்பிட்ட ஐகோர்ட், "அந்த பெண்ணே தனக்குப் பிரச்சனையை வரவழைத்துக் கொண்டார்.. அதற்கு அவரேதான் பொறுப்பு" என்று கூறினார். இந்த கருத்து தான் இப்போது விவாதமாக மாறியிருக்கிறது.
ஜாமீன் வழக்கில் உத்தரவு
மேலும், மருத்துவ பரிசோதனையின் போது பாதிக்கப்பட்ட பெண்ணின் கன்னி திரை கிழிந்திருப்பதிருந்தாலும் கூட, பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என்பதை மருத்துவரால் உறுதியாகக் கூற முடியவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. மறுபுறம் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் இருவருடைய சம்மதத்துடன் தான் உடலுறவு நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மீது கடந்த கால குற்றவியல் வரலாறு இல்லாததையும் மேற்கோள் காட்டிய நீதிமன்றம், "இதன் அடிப்படையில் அந்த நபருக்கு ஜாமீன் வழங்கலாம்" என்று குறிப்பிட்டது.
ஜாமீன் மனுவை அரசு எதிர்த்த போதிலும், அந்த பெண் பாரில் இருந்தது மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் குறித்துப் பாதிக்கப்பட்ட நபர் முன்வைத்த வாதங்களை எதிர்க்கவில்லை.
-
ரோடு ஷோ விதிகள்.. தவெக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு 3 வாரம் அவகாசம் வழங்கிய ஐகோர்ட் -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications