பேஸ்புக்கில் ஆபாச பதிவு செய்த சிறுவன்... மனமுடைந்த 14 வயது மும்பை சிறுமி தற்கொலை

மும்பையின் காந்திவ்லி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் பேஸ்புக் இணையதள பக்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தொடர்ந்து ஆபாச செய்திகளை பதிவு செய்து வந்துள்ளான். இதனால் மனவேதனை அடைந்த அச்சிறுமி, இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவளது பெற்றோர் இதுகுறித்து அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், இப்புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று பள்ளி முடிந்து திரும்பிய அச்சிறுமி, தனது அறைக்குள் சென்று படிக்கப் போவதாகக் கூறியுள்ளாள். ஆனால், இரவு வெகுநேரமாகியும் சிறுமியின் அறைக்கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அவளது பெற்றோர் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
அப்போது, சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவன் தொடர்ந்து கொடுத்த தொல்லையே சிறுமியின் தற்கொலைக்குக் காரணம் எனத் தெரிவித்த அவளது பெற்றோர், தாங்கள் அளித்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications