நண்பேன்டா... 4 ஆண்டுகளுக்குப் பின் அமர்சிங்குடன் கை கோர்க்கும் முலாயம்சிங் யாதவ்
லக்னோ: சமாஜ்வாடி கட்சியில் இருந்து 4 ஆண்டுகளுக்கு முன்னர் நீக்கப்பட்ட 16 ஆண்டுகால நண்பர் அமர்சிங்குடன் மீண்டும் கை கோர்க்கிறார் முலாயம்சிங் யாதவ்.
அமர்சிங்.. சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங்கின் வலது, இடது கரமாக இருந்தவர்.. அக்கட்சியின் பொதுச்செயலாளர், செய்தித் தொடர்பாளர் மற்றும் கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளையும் வகித்து வந்தார் அமர்சிங்.
முலாயம்சிங் யாதவுக்கு அடுத்த தலைவராக திகழ்ந்தவர் அமர்சிங். சில நேரத்தில் சமாஜ்வாடி கட்சியின் செயல் தலைவர் ரேஞ்சுக்கும் செயல்பட்டார். இதை முலாயம்சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் விரும்பவில்லை. மேலும் முலாயம் மற்றும் அமர்சிங் இருவருக்குமான நெருக்கம் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களான ராம்கோபால் யாதவ், ஆஸம்கான் உள்ளிட்டோரையும் பொறாமை கொள்ள வைத்தது.

2010ல் பிளவு
இந்த நிலையில் 2010ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலை முன்வைத்து இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. அந்த தேர்தலில் முலாயம்சிங் யாதவின் மருமகளும் அவரது மகன் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் தோல்வியடைந்தார். இந்த தோல்வி குறித்து அமர்சிங் தெரிவித்த கருத்துகள் முலாயம்சிங் குடும்பத்தை காயப்பட வைத்தது.

ஜெயபிரதாவுக்கு முக்கியத்துவம் இல்லை
அத்துடன் அமர்சிங்கின் தோழி ஜெயப்பிரதாவுக்கு சமாஜ்வாடியில் முக்கியத்துவம் கொடுப்பதை அக்கட்சியின் பிற தலைவர்களான பேனி பிரசாத் வர்மா, ஆஸம்கான் ஆகியோரும் விரும்பவில்லை.

சமாஜ்வாடியில் இருந்து டிஸ்மிஸ்
இப்படி தொடங்கிய பிளவின் முடிவில்தான் உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தைக் காட்டி சமாஜ்வாடி கட்சியில் இருந்து அமர்சிங் ராஜினாமா செய்தார். பின்னர் சமாஜ்வாடி கட்சியில் இருந்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அவருடன் ஜெயபிரதாவும் சமாஜ்வாடி கட்சியை விட்டு வெளியேறினார்.

ராஷ்டிரிய லோக் தளம்
பின்னர் லோக்சபா தேர்தலின் போது அஜித்சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியில் அமர்சிங்கும் ஜெயப்பிரதாவும் இணைந்தனர்.

அமர்சிங், ஜெயப்பிரதாவுக்காக வருந்திய முலாயம்
அதே நேரத்தில் அமர்சிங்கும் ஜெயப்பிரதாவும் தம்முடன் இல்லையே என்ற வருத்தத்தை கடந்த மார்ச் மாதம் கூட முலாயம்சிங் வெளிப்படுத்தியிருந்தார். லோக்சபா தேர்தலில் சமாஜ்வாடி கட்சியும் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியைப் பெறவில்லை.

பூங்கா திறப்பு விழாவுக்கு அழைப்பு
இந்த நிலையில் அமர்சிங்கின் தேவையை உணர்ந்ததாலோ என்னவோ லக்னோவில் இன்று நடைபெற உள்ள ஜானேஸ்வர் மிஸ்ரா பூங்கா திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு முலாயம்சிங் திடீரென அழைப்பு விடுத்தார்.

அமர்சிங் சொல்வது என்ன?
அமர்சிங்கும் தாம் இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். இது குறித்து அமர்சிங் கூறியுள்ளதாவது:
சமாஜ்வாடி கட்சியில் இருந்து ராம்கோபால் யாதவ் அல்லது ஆஸம்கான் அல்லது மறைந்த ஜானேஸ்வர் மிஸ்ரா ஆகியோரது நெருக்கடியால்தான் என்னை கட்சியை விட்டு முலாயம் நீக்கியிருக்கலாம்.

நான் ஒரு முலாயம்வாதி
ஆனால் அதை என்னிடம் முலாயம்சிங் யாதவ் சொல்லியிருக்கலாம். ஜானேஸ்வர் மிஸ்ராவுடன் ஒருமுறை உரையாடிக் கொண்டிருக்கும் போது நான் ஒரு சோசியலிஸ்ட் கிடையாது.. சமாஜ்வாடியும் கிடையாது.. நான் ஒரு முலாயம்வாதி என்று வெளிப்படையாகவே கூறியிருந்தேன்.

விழாவுக்கு செல்கிறேன்..
இப்பொழுது முலாயம்சிங் என்னை ஜானேஸ்வர் பூங்கா திறப்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடுவது புத்திசாலித்தனம் அல்ல என்று உணர்கிறேன். அதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.
இவ்வாறு அமர்சிங் கூறியுள்ளார்.

மூத்த தலைவர்கள் கலக்கம்
அமர்சிங்கும் முலாயம்சிங்கும் மீண்டும் கை கோர்க்கிறார்கள் என்ற செய்தி மூத்த சமாஜ்வாடி கட்சித் தலைவர்களை கலக்கமடைய வைத்துள்ளது. மீண்டும் அமர்சிங் மேலாதிக்கம் செலுத்திவிடுவாரோ என்ற அச்சத்தில் அவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

அரசியலுக்கு சம்பந்தமே இல்லையே..
இந்நிலையில் பூங்கா திறப்பு விழாவுக்கு சற்று முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமர்சிங், சமாஜ்வாடி கட்சியின் மறைந்த ஒரு மூத்த தலைவருக்கு நானும் முலாயம்சிங் யாதவும் செய்கிற மரியாதை இது.. இதை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டியது இல்லை. இது அரசியல் நிகழ்ச்சி இல்லை. ஜானேஸ்வர்ஜியுடன் இணைந்து பணியாற்றினேன். அவரது கொள்கைகளை பின்பற்றுகிறவன் நான்... என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications