துணை ராணுவப்படை குவிப்பை அடுத்து அமர்நாத் யாத்திரையும் நிறுத்தம்.. காஷ்மீரில் என்ன நடக்கிறது?
ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அங்கு அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அங்கு அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக காஷ்மீர் பிரச்சனை மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. திடீர் என்று துணை ராணுவப்படையினர் அதிக அளவில் காஷ்மீர் எல்லையில் நிறுத்தப்பட்டு வருகிறார்கள். லோக்சபா தேர்தல் முடிந்த போதே காஷ்மீர் எல்லையில் 40,000 துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று 10000 துணை ராணுவ படையினர் காஷ்மீர் எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் கூடுதல் வீரர்கள் விரைவில் காஷ்மீர் எல்லைக்கு அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு நாட்களுக்கு முன் மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீர் சென்றார். அங்கு முக்கிய அதிகாரிகள், ராணுவ வீரர்கள், உளவுத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பின்புதான் காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு அதிகம் ஆகியுள்ளது. இதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்பு ஒன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. அதனால்தான் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது அங்கு அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 1ம் தேதி காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை தொடங்கியது. கடந்த 27 நாட்களில் மட்டும் மொத்தம் 3,17,726 பேர் அங்கு குகையில் தரிசனம் செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் மொத்தமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மழை காரணமாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு அதிகமாக மழை பெய்து வருவதால், யாத்திரை நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஒரு மாதமாகவே அங்கு மழை பெய்கிறது. ஆனால் அப்போதெல்லாம் யாத்திரையை நிறுத்தவில்லை. இப்போது மட்டும் ஏன் நிறுத்தி உள்ளனர் என்று பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தீவிரவாத தாக்குதல் குறித்த எச்சரிக்கையை அடுத்தே இந்த நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இதற்கு பின் பாதுகாப்பு காரணங்கள் இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications