ஆட்டின் உடலில் "பிறை" குறியும், அந்த உருது எழுத்தும்.. ஆட்டு சந்தையிலேயே மகிழ்ந்து போன இஸ்லாமியர்கள்

Subscribe to Oneindia Tamil

போபால்: பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை களைகட்டிவிட்டன.. அதுவும், சில ஆடுகள் பொதுமக்களையே வியப்பில் ஆழ்த்தி வருகின்றன.. என்ன காரணம்?

எப்போதுமே பக்ரீத் பண்டிகை திருநாளை முன்னிட்டு, பல்வேறு கால்நடை சந்தைகளில் "ஆடுகள்" பெருத்த கவனத்தை பெற்று வருகின்றன.. வருடா வருடம் ஏதாவது ஆச்சரியத்தக்க நிகழ்வுகளும், இதுபோன்ற ஆடு விற்பனை சந்தைகளில் நடந்துவருவது வாடிக்கையாகும்.

goat goat sale Crescent Mark Madhya Pradesh Urdu

அந்தவகையில், கடந்த வருடம்கூட, பக்ரீத் பண்டிகையின்போது மத்திய பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. வாகித் உசேன் என்பவர், தான் வளர்த்த ஆட்டினை சந்தைக்கு அப்போது கொண்டுவந்திருந்தார்.. அந்த ஆட்டுக்கு 7 லட்சம் விலையையும் நிர்ணயித்திருந்தார்.

இதைக்கேட்டு சந்தைக்கு வந்திருந்தவர்கள் ஆச்சரியத்தில் உறைந்து நின்றுவிட்டார்கள்.. தன்னுடைய ஆடு கலப்பில்லாத ஆடு இனத்தை சேர்ந்தது என்றும், ஆட்டின் உடலில் உள்ள வண்ணங்களில் உருது எழுத்துக்கள் போன்ற தோற்றம் உள்ளதையும் அம்மக்களிடம் சுட்டிக்காட்டினார் உசேன்..

உருது எழுத்து: இதையடுத்து, ஒருவர் 22 லட்சம் கொடுத்து அந்த ஆட்டினை வாங்க முன்வந்தார்.. ஆனால் உசேன் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.. 7 லட்சத்துக்கு மட்டுமே தன்னுடைய ஆட்டை விற்க வந்திருப்பதாகவும், இந்த ஆட்டை விற்று, தன்னுடைய 3 மகள் கல்யாணத்தையும் நடத்த போவதாகவும் கூறியிருந்தார்.

இதுபோலவே,மத்திய பிரதேசத்தின் மால்வாவில் உள்ள சந்தையில், சுல்தான் என்ற ஆடு 11 லட்ச ரூபாய்க்கு விற்பனைக்கு வந்திருந்தது.. இந்த ஆட்டின் ஓனர் பெயர் ஷாருக்கான்.

இவர் தன்னுடைய ஆட்டின் பெருமையை பற்றி சந்தையிலுள்ள மக்களிடம் பேசிக்கொண்டேயிருந்தார். தன்னுடைய ஆட்டின் மீது நபிகள் நாயகமே உருது எழுத்தில் எழுதியிருக்கிறார் என்றும், 60 கிலோ எடையில் இருக்கும் சுல்தானுக்கு தினமும் முந்திரியும் பாதாமும் கொடுத்து வளர்த்து வருவதாகவும் பெருமிதத்துடன் கூறினார்.

சிறப்பு கவனம்: அந்தவகையில், இன்று பக்ரீத் பண்டிகை என்பதால், சில ஆடுகள் சிறப்பு கவனத்தை பெற்றுள்ளன.. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலம் போபாலில், உடலில் பிறை குறியுடன் உள்ள ஒரு ஆட்டிற்கு, 2 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.. உடலில் வெள்ளை நிறத்தில் பிறை குறியுடன் இருக்கும் அந்த ஆட்டினை, பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

ஆனால், இதைவிட மத்திய பிரதேசத்தின் ஆடு ஒன்று பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது.. போபால் சந்தையில், சையத் ஷஹாய் என்பவர் தான் வளர்த்த ஆட்டினை, இன்று விற்பதற்காக கொண்டுவந்திருந்தார்.. இறுதியில் அந்த 1 ஆட்டினை 7.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறார்.

ஸ்பெஷாலிட்டி: சையத் சொல்லும்போது, "ரப்தார் என்ற இனத்தை சேர்ந்தது என்னுடைய ஆடு.. மொத்தம் 155 கிலோ எடையுள்ளது.. இன்று அதனை 7 லட்சத்திற்கு விற்பனை செய்தேன்.. இதன் சிறப்பியல்பு, மற்ற எந்த ஆட்டு இனத்தையும் விட மிக ஆக்ரோஷமானது... 150 கிலோவுக்கு மேல் வளரக்கூடியது.. இது மனிதர்களை தாக்கினால் உயிரைக்கூட இழக்க நேரிடும். இந்த இனத்தின் ஆடுகள், பக்ரீத் பண்டிகைக்காகவே சிறப்பாக வளர்க்கப்படுகின்றன" என்றார்.

நாடு முழுவதுமே கால்நடை சந்தைகளில், இது போன்ற உருவங்களை உடலில் கொண்ட ஆடுகளுக்கு பெரும் கிராக்கி இருந்து வருகிறது.. அதேசமயம், எத்தனை லட்சங்களை கொட்டிக்கொடுத்தாலும், சில ஓனர்கள், தங்கள் ஆடுகளை விற்க முன்வருவதில்லை...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+