இந்திய அலுவல் மொழியாக சமஸ்கிருதத்தை வலியுறுத்தினார் அம்பேத்கர்: தலைமை நீதிபதி போப்டே
நாக்பூர்: இந்தியாவின் அதிகாரப்பூர்வமான அலுவல் மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என அண்ணல் அம்பேத்கர் வலியுறுத்தியதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே சுட்டிக்காட்டியுள்ளார்.
நாக்பூரில் உள்ள மகாராஷ்டிரா தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் அம்பேத்கர் 130வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி போப்டே பேசியதாவது:
நான் மராத்தி மொழியில் அல்லது ஆங்கிலத்தில் பேச வேண்டும்? என யோசித்து கொண்டிருந்தேன். இந்த ஊசலாட்டம் இந்த தேசத்தில் பன்னெடுங்காலமாகவே இருந்தும் வருகிறதுதான்.

எது அலுவல் மொழி?
நமது நாட்டின் நீதிமன்றங்களில் எந்த மொழி அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்பது குறித்த விவாதங்கள், கேள்விகள் அடிக்கடி எழுப்பப்படுகின்றன. நமது நாட்டின் உயர்நீதிமன்றங்கள், ஆங்கிலத்தையும் இந்தியையும் அலுவல் மொழிகளாகக் கொண்டிருக்கின்றன. சிலர் தமிழையும் சிலர் தெலுங்கையும் அலுவல் மொழிகளாக்க விரும்புகின்றனர்.

அம்பேத்கர்- சமஸ்கிருதம்
ஆனால் அண்ணல் அம்பேத்கரோ, இந்தியாவில் அலுவல் மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தினார். அம்பேத்கரைப் பொறுத்தவரையில் வட இந்தியாவில் தமிழ் மொழியை ஏற்கமாட்டார்கள்; தென்னிந்தியாவில் இந்தி மொழியை ஏற்கமாட்டார்கள். ஆனால் சமஸ்கிருத மொழிக்கு வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் எதிர்ப்பு இருக்காது என கருதினார் அம்பேத்கர்.

நிறைவேறாத அம்பேத்கர் விருப்பம்
அதனால்தான் அம்பேத்கர் இந்த கருத்தை முன்வைத்தார். ஆனால் சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறாமல் போனது. சட்டத்தில் மட்டுமல்ல சமூகம், அரசியல் துறைகளிலும் அம்பேத்கர் வல்லுநராக திகழ்ந்தவர். மக்களுக்கு என்ன தேவை, ஏழைகளுக்கு என்ன என்பதை அறிந்தவராக இருந்தார்.

அலுவல் மொழியாக ஆங்கிலம்
ஆனால் கடைசியில் இந்தியாவின் அலுவல் மொழியாக ஆங்கிலம் கொண்டுவரப்பட்டது. அதனால் நானும் ஆங்கிலத்தில் இங்கே பேசுகிறேன். இவ்வாறு இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா, உச்சநீதிமன்ற நீதிபதி பூஷண் கவாய் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications