பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் மறைவுக்கு மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகம் இரங்கல்
பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் மரணம் வருத்தத்தை அளிப்பதாக மும்பையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மும்பை : பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் மரணம் மிகுந்த வருத்ததை ஏற்படுத்தி இருப்பதாக மும்பையில் உள்ள அமெரிக்கத் தூதகரம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ஸ்ரீதேவி. தமிழில் ரஜினி, கமல் உள்ளிட்ட முண்ணனி நடிகர்களின் திரைப்படங்களிலும், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளும் நடித்தவர் ஸ்ரீதேவி.

அவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உண்டு. இந்தி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட்டின் பெண் சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்தையும் பெற்றவர்.
இந்தி திரைப்பட இயக்குநர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறிய ஸ்ரீதேவிக்கு, ஜானவி மற்றும் குஷி என இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், துபாயில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ரீதேவி இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஸ்ரீதேவியின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு நாட்டின் பல்துறை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீதேவிக்கு மும்பையில் உள்ள அமெரிக்கத் தூதகரம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும், தனது நடிப்புத் திறமையால் உலக மக்களின் மனதைத் தொட்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஸ்ரீதேவியின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்திற்கும், ரசிகர்களும் இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவிப்பதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications