நம் நாடு வளர்ச்சி அடையாமல் போனதற்கு காங்கிரஸ் அரசுதான் காரணம் - அமித்ஷா தாக்கு
லக்னோ: நாடு வளர்ச்சி அடையாமல் போனதற்கு முந்தைய காங்கிரஸ் அரசுகளே காரணம் என பா.ஜ.க. தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி உத்தர பிரதேச மாநிலம் லக்னோ புறநகரான ககோரியில் இன்று பா.ஜ.க. சார்பில் தியாகிகளை கவுரவிக்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா கலந்துகொண்டு பேசியதாவது: நம் நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் ஆகிறது, ஆனால் நாட்டில் வளர்ச்சி இல்லை, காரணம் ஒரே குடும்பம் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது. இதனைக் கூறும்போது நான் வருந்துகிறேன், ஆட்சிக்கட்டிலில் இருந்தது காங்கிரஸ் ஆனால் முடிவுகள் இன்று நம் கண்முன்னே சாட்சியமாக விரிந்துள்ளது.
நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் மாநிலங்கள் வளர்ச்சி அடைய வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதியோ, பகுஜன் சமாஜோ ஆட்சிக்கு வந்தால் அவர்கள் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் நலனிலேயே அக்கறை செலுத்துவார்கள். பா.ஜ.க. மட்டுமே அனைத்துத் தரப்பினர் வளர்ச்சிக்கும் ஒட்டுமொத்த மாநில வளர்ச்சிக்கும் உழைக்கும். உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சி இல்லாமல் நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல முடியாது.
நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது. கிராமங்களில் மின்சாரம் இல்லை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை, வேளாண் நிலங்கள் பயிர்செய்வதற்கான பாசன வசதிகள் இல்லை, மருந்துகள் இல்லாமல் ஏழைகள் இறந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications