சொராபுதீன் ஷேக்கை என்கவுண்டர் செய்ய அமித்ஷாவிற்கு ரூ.60 லட்சம் லஞ்சம்.. சிபிஐ அதிகாரி திடுக்
Recommended Video

காந்திநகர்: குஜராத் போலீசாரால் கடந்த 2005ம் ஆண்டு சொரபுதீன் ஷேக் எண்கவுன்ட்டர் செய்யப்பட்டதில், பாஜக தலைவர் அமித் ஷா, பண ரீதியாக ஆதாயம் அடைந்தார் என்று சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை அதிகாரி தெரிவித்துள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநில அரசில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அமித் ஷா. அப்போது, அந்த மாநிலத்தைச் சேர்ந்த சொராபுதீன் ஷேக் என்பவருக்குத் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், அரசியல் தலைவர்களை கொல்லத் திட்டமிட்டுள்ளார் என்றும் குற்றம்சாட்டி, குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் 2005ல், கைது செய்தனர். அதே ஆண்டு, நவம்பர் 26ம் தேதி, சொராபுதீன் ஷேக்கை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுகொலை செய்தனர். இந்த பரபரப்பு ஓயும் முன்பாக, சொராபுதீன் ஷேக் மனைவி கவுசர்பியையும் போலீசார் சுட்டுக்கொன்றனர்.

இதன்பிறகு, கடந்த 2006ம் ஆண்டு, சொராபுதீன் ஷேக் உதவியாளர் துளசி பிரஜாபதி குஜராத் மற்றும் ராஜஸ்தான் போலீசாருடன், இணைந்து டிசம்பர் மாதம் சுட்டுக்கொன்றனர். இந்த 3 கொலைகளும் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தின. இவை போலி என்கவுண்டர்கள் என சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
3 கொலைகளிலும், குஜராத் மாநில அரசின் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு தொடர்பு இருந்ததாக, அப்போது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து அமித்ஷா 2010ல் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை, மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
என்கவுண்டர் வழக்கை விசாரணை செய்த தலைமை விசாரணை அதிகாரியான அமிதாப் தாக்கூர், நீதிமன்றத்தில், இந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில், "சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில், அமித் ஷா, அரசியல் ரீதியாக மட்டுமின்றி, பண ரீதியாகவும், ஆதாயம் அடைந்தார். அகமதாபாத்தை சேர்ந்த பட்டேல் சகோதரர்கள் அமித் ஷாவுக்கு ரூ.70 லட்சம் கொடுத்து இந்த என்கவுண்டர் செய்யப்பட்டது. தீவிரவாத தடுப்புப்பரிவு டிஐஜி வன்சாராவுக்கும் ரூ.60 லட்சத்தை பட்டேல் சகோதரர்கள் கொடுத்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications