அமித்ஷா ஒரு சிறைப்பறவை, மூளை கிடையாது.. சித்தராமையா கடும் தாக்கு
பெங்களூர்: அமித்ஷா ஒரு ஜெயில் பறவை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
மைசூரில் நேற்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்றார். ஊழல்களால் சித்தராமையா அரசு நிரம்பி வழிவதாக அமித்ஷா குற்றம்சாட்டினார்.

அமித்ஷா இதுபற்றி வெளியிட்ட ஒரு டிவிட்டை தனது டிவிட்டர் அக்கவுண்டில், சில கருத்துக்களை 'கோட்' செய்து ரீடிவிட் செய்துள்ளார் சித்தராமையா.
சித்தராமையா கூறியுள்ளாதவது: கர்நாடக தேர்தலில் முன்னாள் சிறைப் பறவையை (எடியூரப்பா) முதல்வர் வேட்பாளராக அறிவித்த மற்றொரு முன்னாள் சிறை பறவை (அமித்ஷா) இதை கூறுகிறார். எனது அரசு மீதான 'சோ கால்டு' ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை அவர் தெரிவிக்க முடியுமா. வெறும் பொய் ஒருபோதும் உதவாது. அவரது ஸ்டன்ட்டை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
Says an ex-jail bird who chose another former jail bird to be his party’s CM candidate for our Karnataka election.
— Siddaramaiah (@siddaramaiah) January 26, 2018
Can he present facts about the so called corruption charges against me or my Govt?
Just telling lies wont help. People will not believe his #jumlas https://t.co/R1OW6FiipB
சித்தராமையா மற்றொரு டிவிட்டில், அமித்ஷா மகன் சொத்து மதிப்பு மூன்று வருடங்களில் 16000 மடங்கு அதிகரித்துள்ளது எப்படி என்பதை அமித்ஷாவுக்கு ஆதரவாக பேசும் மத்திய புள்ளியியல் துறை அமைச்சர் சதானந்தகவுடா விளக்குவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். சதானந்தகவுடா கர்நாடக பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர், முன்னாள் முதல்வராகும்.
இதனிடையே நிருபர்களிடம் இன்று பேசிய சித்தராமையா, அமித்ஷாவுக்கு மூளை என்ற ஒன்று கிடையாது. மூளையற்ற மனிதர் என கடுமையாக சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications