பாஜக தேசிய தலைவராகிறார் மோடியின் 'நிழல்' அமித்ஷா
டெல்லி: பிரதமர் நரேந்திரமோடியின் வலதுகரமான அமித்ஷா, பாஜக தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. இதன் மூலம் குஜராத், உத்தரபிரதேச மாடல் அரசியலை நாடு முழுமைக்கும் கொண்டு செல்ல பாஜக திட்டமிட்டுள்ளது.
குஜராத் முதல்வராக நரேந்திரமோடி பதவி வகித்தபோது உள்துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர் அமித் ஷா. அப்போது நடைபெற்ற போலி என்கவுண்டர் வழக்கு தொடர்பாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் மோடியின் வலதுகரமாகவே தொடர்ந்தார். நரேந்திரமோடியை பாஜக தனது பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்ததும், மோடி அமித்ஷாவைதான் மலைபோல நம்பினார்.

உத்தரபிரதேசம் கைவசம்
80 மக்களவை தொகுதிகளை கொண்டுள்ள உத்தரபிரதேசத்தில் பெரும் வெற்றி பெற்றால் ஆட்சியமைத்துவிடலாம் என்று கருதிய மோடி, தனது ஆத்ம நண்பன் அமித்ஷாவை உ.பியின் கட்சி பொறுப்பாளராக்கினார். அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது. 73 தொகுகளை அப்படியே சுருட்டியது பாஜக. இந்த வெற்றியால் அமித்ஷாவின் மதிப்பு கட்சிக்குள் பல மடங்கு அதிகரித்துள்ளது.

அமைச்சரவையில் வேண்டாம்
நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவையில் அமித்ஷாவுக்கு முக்கியமான துறை கொண்ட அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அமித்ஷாவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. அதே நேரம், பாஜக தலைவராக உள்ள ராஜ்நாத்சிங் மத்திய உள்துறை அமைச்சர் ஆக்கப்பட்டார். இரு பதவிகளையும் ஒருவரே வகிக்க முடியாது என்பதால் பாஜக தலைவர் பதவியை ராஜ்நாத்சிங் ராஜினாமா செய்ய போகிறார். இந்த பதவிக்கு அமித்ஷாவை கொண்டுவர நரேந்திரமோடி திட்டமிட்டுள்ளார்.

பொறுப்பேற்ற ஆர்எஸ்எஸ்
புதிய பாஜக தலைவரை தேர்ந்தெடுக்க அந்த கட்சியின் தாய் அமைப்பாக கருதப்படும் ஆர்எஸ்எஸ்சுக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதிக்க ராஜஸ்தான் மாநிலம் சித்தூரில் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது, அமித்ஷா, ஹிமாச்சல பிரதேசத்தின் பாஜக பொதுச்செயலாளர் ஜகத் பிரகாஷ் நட்டா, ஆந்திர நிர்வாகி முரளிதர்ராவ், ராஜஸ்தான் பாஜக தலைவர் ஓம் மத்தூர் ஆகியோரின் பெயர்கள் புதிய தலைவர் பதவிக்காக பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

எதிர்பார்ப்பு
ஆலோசனைக்கு பிறகு, பாஜகவின் புதிய தலைவர் யார் என்பதை அறிவிக்கும் பொறுப்பு, ஆர்எஸ்எஸ் அமைப்பின், தலைவர் மோகன் பகவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அமித் ஷாவின் பெயரையே அவர் பரிந்துரைப்பார் என்ற எதிர்பார்ப்பு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் வட்டாரங்களில் நிலவுகிறது.

அமித்ஷா சேவை, பாஜகவுக்கு தேவை
குஜராத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திரமோடி முதல்வரானார். உ.பி.யில் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதற்கெல்லாம் அமித்ஷாவின் அர்ப்பணிப்பு முக்கிய காரணம் என்பதால், தேசம் முழுவதிலும் கட்சியை வளர்க்கும் பொறுப்பும் அவருக்கே வழங்கப்படும் என்று பாஜக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications