இலங்கையில் எடுத்த போட்டோவை கேரளாவில் எடுத்ததாகக் கூறி சர்ச்சையில் சிக்கிய அமித் ஷா
டெல்லி: கேரளாவில் ஊட்டச்சத்து குறைவால் குழந்தைகள் இறப்பது குறித்து பாஜக தலைவர் அமித் ஷா பத்திரிக்கையாளர்களிடம் காண்பித்த புகைப்படம் உண்மையில் இலங்கையில் எடுக்கப்பட்டது.
கேரளாவில் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளது என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் அவுட்லுக் பத்திரிக்கையின் 2013ம் ஆண்டு ஜூலை மாத பதிப்பின் அட்டைப் படத்தை காட்டி பாருங்க, கேரளாவில் உள்ள குழந்தையின் பரிதாப நிலையை பாருங்க என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உண்மையில் அந்த அட்டைப்படத்தில் இருக்கும் குழந்தை கேரளாவை சேர்ந்தது அல்ல மாறாக ஈழ அகதிக் குழந்தை. 2009ம் ஆண்டு இலங்கை போரின்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் அமித் ஷா கேரளாவில் எடுக்கப்பட்டதாக கூறினார். இலங்கை குறித்த செய்தியில் அமெரிக்க அரசு பயன்படுத்திய அதே புகைப்படத்தை அவுட்லுக்கில் கேரளாவில் எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை அமித்ஷாவும் சரிபார்க்காமல் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது குறித்து அவுட்லுக் ஆசிரியர் கிருஷ்ண பிரசாத் கூறுகையில்,
இந்த விவகாரம் முதல் முறையாக எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை யாரும் இந்த புகைப்படம் பற்றி எதுவும் கூறவில்லை. இது ஒரு என்.ஜி.ஓ. ஊழியர் அனுப்பி வைத்த புகைப்படம் என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications