For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னைப்போல பரந்த மனதுடன் இருந்தால் இந்தியாவில் பெண்கள் முன்னேற முடியும்- அம்ரிதா ராய் கணவன் 'அட்வைஸ்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: தனது மனைவியை திக்விஜய் சிங் திருமணம் செய்துகொள்ளுவதில் அதிருப்தியில்லை என்று கூறியுள்ள அம்ரித்தா ராயின் கணவன் ஆனந்த்பிரதான், ஒருபடி மேலேயே போய் தன்னைப்போல எல்லோரும் பரந்தமனதுடன் இருந்தால்தான் இந்தியாவில் பெண்கள் முன்னேற்றம் சாத்தியம் என்று கூறியுள்ளார்.

Amrita Rai's husband supports her decision to marry Digvijaya Singh

தனது வயதில் பாதிதான் உள்ள பத்திரிகையாளர் அம்ரிதா ராயை திருமணம் செய்துகொள்ளப்போவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் அறிவித்துள்ளார். அம்ரிதாராயும் அவரது கணவனும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு முடிவுக்கு வந்ததும் தங்களது திருமணம் நடக்கும் என்றும் திக்விஜய்சிங் கூறியிருந்தார்.

இதனிடையே திக்விஜய்சிங்கும், அம்ரித்தாவும் மிகவும் நெருக்கமாக உள்ள புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன் இருக்கும்போதே அந்த பெண் இவ்வாறு முதியவருடன் நெருக்கமாக இருந்துள்ளாரே என்ற ஆதங்கம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. அந்த கணவன் இதுபோன்ற அவமானத்தால் மனமுடைந்துபோயிருப்பாரே என்று பலரும் பரிதாபப்பட்டனர்.

ஆனால் அம்ரித்தாவின் கணவன் ஆனந்த் பிரதான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

பெண்ணுக்கும், ஆணுக்குமான உறவை புரிந்துகொள்ள மக்களுக்கு தெரிவதில்லை. ஒரு பெண் சுதந்திரமாக இருப்பதையும், சுதந்திரமாக வாழ்வதையும் இந்த சமுதாயம் அங்கீகரிக்க மறுக்கிறது. பெண் என்பவள் பிள்ளை பெற்கும் மிஷினோ அல்லது ஒருவருடைய தனி உரிமையோ கிடையாது.

நாம் பெண்களின் மாண்புக்கு மரியாதை கொடுப்பதில்லை. பெண்களை மதிக்க தெரியாதவர்களுக்கெல்லாம், விளையாடவும், பிறர் மீது சேற்றை வாரி இறைக்கவும் இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

என்னைப்போன்ற பரந்த மனதுடைய, ஆதரவான ஆண்கள் இருந்தால்தான் இந்தியாவில் பெண்களுக்கு மேலும் சிறப்பான அந்தஸ்து கிடைக்கும். இவ்வாறு அவர் தனது டுவிட்டர் பக்தத்தில் தெரிவித்துள்ளார்.

அருமையான குடும்பம்!

English summary
Amrita Rai's erstwhile husband Anand Pradhan put up a post on a social networking website clearing the air of doubt. Only if we had more open-minded and supportive men like this, India would be a much better place for women he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X