ஜெ. பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார் அம்ருத்தா.. அவர் சொல்வது பொய்.. புகழேந்தி ஆவேசம்!
ஜெயலலிதா தனது தாய் எனக்கூறி அவரது பெயருக்கு அம்ருத்தா களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக தினகரன் ஆதரவாளர் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

பெங்களூரு: ஜெயலலிதா தனது தாய் எனக்கூறி அவரது பெயருக்கு அம்ருத்தா களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக தினகரன் ஆதரவாளர் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருத்தா, ஜெயலலிதாவுக்கு பிறந்த மகள் தான்தான் என்றும் இதனை உறுதி செய்ய ஜெயலலிதாவின் உடலை தோண்டியெடுத்து டிஎன்ஏ சோதனை நடத்த உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை நேற்று விசாரித்த சுப்ரீம்கோர்ட் மனுதாரர் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறி நிராகரித்தது.
இதையடுத்து தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்த அம்ருத்தா இறக்கும் தருவாயில் தனது வளர்ப்பு தந்தையான பார்த்த சாரதிதான் தான் ஜெயலலிதாவுக்கு பிறந்த மகள் என்ற உண்மையை கூறியதாகவும் தெரிவித்தார். மேலும் தான் ஜெயலலிதாவின் மகள் என்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியும் என்றும் அவர் கூறினார்.

அம்ருத்தா பொய் சொல்கிறார்
அவரது இந்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தினகரனின் ஆதரவாளரும் அவர் அணியின் கர்நாடக மாநில செயலாளருமான புகழேந்தி ஜெயலலிதா மகள் என்று அம்ருத்தா பொய் சொல்கிறார் என தெரிவித்துள்ளார்.

ஜெ.மகள் கிடையாது
மேலும் அம்ருதா என்ற பெண் தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அவர் ஜெயலலிதாவின் மகள் கிடையாது என்றும் கூறினார்.

களங்கம் ஏற்படுத்த முயற்சி
ஜெயலலிதாவை நாங்கள் மட்டும் அல்ல, கோடானகோடி தொண்டர்களும், பொதுமக்களும் அவரை அம்மா அம்மா என்று பாசத்தோடு அழைக்கிறார்கள் என்றும் புகழேந்தி தெரிவித்தார். பல நலத்திட்ட உதவிகளை செய்து தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த அம்மா மீது களங்கம் ஏற்படுத்த அம்ருதா முயற்சிக்கிறார் என்றும் புகழேந்தி குற்றம்சாட்டினார்.

பொய் என்பதை நிரூபிப்போம்
அம்ருதா வழக்கில் எங்களையும் இணைத்துக் கொண்டு வாதாடுவோம் என்றும் அவர் கூறியது பொய் என்பதை நிரூபிப்போம் என்றும் புகழேந்தி தெரிவித்தார். இவரது தாயார் சைலஜா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டுக்கு அடிக்கடி வந்து ஜெயலலிதா எனது சகோதரி என்று கூறி வந்தார்.

இது ஒரு ஏமாற்று வேலை
அவருடைய சகோதரி என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று கேட்டபோது உறவினர்கள் கூறியதாக அவர் தெரிவித்தார் என்றும் புகழேந்தி தெரிவித்தார். ஜெயலலிதாவுடன் எடுத்த ஒரு புகைப்படத்தையாவது ஆதாரமாக கொண்டு வாருங்கள் என்று கேட்டபோது அதுவும் இல்லை என்று கூறி விட்டார். அவர் இறந்த பிறகு அவரது மகள் அம்ருதா தற்போது ஜெயலலிதா எனது தாயார் என்று கூறி வருகிறார். இது ஒரு ஏமாற்று வேலை என்றும் புகழேந்தி குற்றம்சாட்டினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications