விரைவில் ஒட்டகப் பாலில் டீ போட்டு குடிக்கலாம் !
இன்னும் 3 மாதத்தில் ஒட்டகப் பாலில் டீ போட்டு குடிக்கலாம்.
டெல்லி: பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் அமுல் நிறுவனம், ஒட்டகப் பாலை இன்னும் 3 மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வர தயாராகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில்தான் என்று இல்லை..குஜராத்தின் பல பகுதிகளிலும் ஒட்டகங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக கட்ச் பிரதேசத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஒட்டகங்கள் இருக்கின்றன. இப்போது அங்கு ஒட்டகப் பால் நடைமுறையில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த ஒட்டகப் பாலை கொள்முதல் செய்து சந்தைப் படுத்த அமுல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன் அடிப்படையில் இன்னும் மூன்று மாதங்களில் ஒட்டகப் பாலை விற்பனைக்கு கொண்டு வர, அமுல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதலில் அகமதாபாத் நகரில் விற்பனைக்கு வருகிறது. இதன் பிறகு படிப்படியாக டெல்லி, மும்பை மற்றும் பிற நகரங்களில் விற்பனை விரிவுபடுத்தப்பட உள்ளது
உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டோருக்கு வைட்டமின் சி சத்து உள்ள ஒட்டகப் பால் கொடுப்பது நல்லதாம். ஆக, இன்னும் 3 மாதங்களில் ஒட்டகப் பால் டீ குடிக்கலாம்.












Click it and Unblock the Notifications