வைகைப்புயல் வடிவேல் மட்டும்தான் குடிப்பாரா?.. இனி நாங்களும் ஒட்டகப்பால்ல டீ குடிப்போம்ல!
அஹமதாபாத்: வைகைப்புயல் வடிவேலு. மட்டும் தான் ஒட்டகப்பாலில் டீ குடிப்பாரா.. இனி நாமும ஒட்டகப்பாலில் டீ குடிக்கமுடியும். அமுல் நிறுவனம் ஒட்டகப்பாலை இந்தியா முழுவதும் விரைவில் விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
வைகைப்புயல் வடிவேலு.. 'வெற்றிக்கொடி கட்டு' படத்தில் ஒட்டகப்பாலில் டீ போடு என டீக்கடைக்காரரை கேட்பார். அதற்கு வடிவேலு துபாயில் ஒட்டகப்பாலில் தான் டீ போடுவார்கள் என கூறுவார். ஆனால் அதெல்லாம் இங்கு இல்லை என்பார்.
இப்படி நடிகர் வடிவேலு 'வெற்றிக்கொடி கட்டு' படத்தின் மூலம் ஒட்டகப்பால் கேட்டு 20 வருடங்கள் ஆகப்போகிறது.

அரபுநாடுகளில்
ஆனால் இதுவரை தமிழகத்தில் ஒட்டகப்பாலில் டீ குடிக்க முடியாத நிலையே இருந்து வந்தது. அப்படி ஒட்டகப்பாலில் டீ குடிக்க வேண்டும் என்றால் அரபு நாடுகளுக்குத்தான் போக வேண்டிய நிலையும் இருக்கிறது.

அமுல் நிறுவனம் முடிவு
இனி வடிவேலு மட்டுமல்ல நாமும் ஒட்டகப்பாலில் டீ குடிக்கலாம். எப்படி என்கிறீர்களா.. குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமல் நிறுவனம் ஒட்டகப்பாலை இந்தியா முழுவதும் விற்க முடிவு செய்துள்ளது. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்று வரும் இந்த நிறுவனம் 200 மில்லி லிட்டர் பாட்டிலில் அடைத்து ஒட்டகப்பாலை விற்க திட்டமிட்டுள்ளது.

ரூ.25க்கு பால் விற்பனை
இது தொடர்பாக அமுல் நிர்வாக இயக்குனர் சோதி கூறுகையில், "இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் ஒட்டகப்பாலை அறிமுகம் செய்ய உள்ளோம். 200 மில்லி லிட்டர் பெட் பாட்டிலில் விற்க உள்ளோம். இதன் விலையை 25 ரூபாய் ஆக நிர்ணயம் செய்துள்ளோம். ஒட்டகப்பாலை விற்பதற்கான ஏற்பாடுகளை காந்தி நகரில் (அஹமதாபாத்) செய்து வருகிறோம். விரைவில் விற்பனை தொடங்கும்

ஜனவரியில் அறிமுகம்
முன்னதாக 500 மில்லி லிட்டர் ஒட்டகப்பாலை ரூ.50 என்ற விலையில் விற்பனைக்காக அமுல் நிறுவனம் கடந்த ஜனவரியில் அறிமுகம் செய்து இருந்தது" என்றார்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications