சிக்கிமில் அதிகாலையில் குலுங்கிய வீடுகள்.. 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு! மக்கள் பீதி
கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவில் 4.4 என நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சிக்கிம் மாநிலம் சோரெங்கில் இன்று அதிகாலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 4.4 என்பது மிதமான அளவுதான். எனவே இதுவரை அப்பகுதியில் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் சமீப காலமாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த 6ம் தேதி மணிப்பூர் மற்றும் மேகாலயாவில் 3.1 மற்றும் 2.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அருணாச்சல பிரதேசத்திலும் 2.3 என்கிற அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. இதற்கும் முன்னர் கடந்த மாதம் 12ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா பகுதியில் ரிக்டர் அளவில் 4.1 என்கிற அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
டெக்டானிக் பிளேட்டுகளின் நகர்வுகளே நிலநடுக்கம் ஏற்படுவதற்கு பொதுவான காரணமாக சொல்லப்படுகிறது. அதாவது பூமியின் மீது நிலத்தட்டுக்கள் இருக்கின்றன. இதைத்தான் விஞ்ஞானிகள் டெக்டானிக் பிளேட் என்று கூறுகின்றனர். ஒரு காலத்தில் இவை அனைத்தும் இணைந்து ஒரே தட்டாக பெரிய நிலப்பரப்பாக இருந்தது. ஆனால், கால மாற்றத்தில் இது உடைந்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கமாக சென்றுவிட்டது. இப்படித்தான் ஏழு பெரும் கண்டங்கள் உருவாகின.
இதில் சேராத நிலப்பரப்புகள் தீவுகளாக மாறின. சில நேரங்களில் இந்த நிலப்பரப்புகள் மெல்ல நகர்ந்து பெரிய நிலப்பரப்பின் மீது மோதுவதுண்டு. தற்போது இருக்கும் இமயமலையும் இப்படித்தான் உருவாகியிருக்கிறது. இந்திய நிலப்பரப்பு ஆசிய கண்டத்துன் மோதியதால் இமயமலை உருவாகியுள்ளது. இந்த மோதல் இன்றும் நீடித்து வருகிறது. எனவே ஆண்டுக்கு சில இன்ச் அளவுக்கு இமய மலையின் உயரம் கூடிக்கொண்டே வருகிறது.
அதேநேரம் லேசான நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன. இப்படித்தான் இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications