லக்னோவில் சர்வதேச தரத்தில்.. குழந்தைகளுக்கான மருத்துவமனை! சுகாதார கட்டமைப்பில் அசத்தும் உ.பி
லக்னோ: உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் ரூ.200 கோடியில் சர்வதேச தரத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை விரைவில் அமைக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் லக்னோவில் ரூ.200 கோடியில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை விரைவில் அமைக்கப்படும் கூறியுள்ளார். சமீபத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முன்மொழிவு துறை சார்ந்த அதிகாரிகளால் வைக்கப்பட்டது. இதற்கு முதல்வர் ஒப்புதல் அளித்திருக்கிறார். லக்னோவில் அமைய உள்ள மருத்துவமனையில் ஏராளமான வசதிகள் இருக்கும். உத்தரப் பிரதேசத்தில் வேறெந்த மருத்துவமனைகளில் இல்லா வசதிகள் இதில் இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
"உத்தரப் பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவிகிதம் 0-18 வயதுக்கு உட்பட்டோர்தான். எனவே இவர்கள் எதிர்கொள்ளும் மருத்துவ பிரச்னைகளுக்கு தீர்வு காணவே இந்த மருத்துவமனை அமைய இருக்கிறது. இதில் இதயம், நுரையீரல் என 20 துறை சார்ந்த மருத்துவர்கள் இருப்பார்கள். இந்த மருத்துவமனையில் 575 படுக்கைகள் இருக்கும். இந்த மருத்துவமனை இரண்டு கட்டிடங்களாக அமைய இருக்கிறது. சுகாதார துறையில், மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக உ.பி விரைவில் மாறும்" என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications