மருத்துவ கல்லூரி வழக்கு: சி.பி.ஐ. நீதிமன்ற விசாரணைக்கு தடை கோரி அன்புமணி சுப்ரீம் கோர்ட்டில் மனு!!
டெல்லி: மருத்துவ கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி கொடுத்த வழக்கில் தம் மீதான சி.பி.ஐ. நீதிமன்ற விசாரணைக்கு தடை கோரி பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மத்திய அமைச்சராக இருந்தபோது உத்தரபிரதேச மாநிலத்தின் ரோகில் காண்ட் மருத்துவ கல்லூரி, மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள இன்டக்ஸ் மருத்துவ கல்லூரி ஆகியவற்றில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது தொடர்பாக அன்புமணி ராமதாஸூக்கு எதிராக சி.பி.ஐ. 2 வழக்குகள் பதிவு செய்தது.

இந்த வழக்குகளை விசாரித்து வரும் டெல்லி நீதிமன்றம் நவம்பர் 2-ந் தேதி அன்புமணி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் அன்புமணி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தம் மீதான 2 வழக்குகளின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதிக்குமாறு கோரி இருந்தார். ஆனால் அன்புமணியின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து இன்று உச்சநீதிமன்றத்தில் தம் மீதான 2 வழக்குகளை சி.பி.ஐ. நீதிமன்றம் விசாரிக்க தடை கோரி அன்புமணி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications