பாமகவை ஏன் தொடங்கினோம் தெரியுமா..? போதும்... நாம் காத்திருந்தது போதும்... அன்புமணி ராமதாஸ் ஆவேசம்..!
கள்ளக்குறிச்சி: பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டதே தமிழகத்தில் சமூகநீதியை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக தான் என அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்துள்ளார்.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாமக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் இதனைக் கூறினார்.
மேலும், வன்னியர்களுக்காக மட்டுமல்லாமல் தமிழகத்தில் பின் தங்கியுள்ள அனைத்து சமுதாயத்துக்காகவும் பாமக தொடர்ந்து போராடும் என அவர் உறுதியளித்தார்.

ஊரக உள்ளாட்சி
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில் நேற்று காஞ்சிபுரத்தில் தனது பரப்புரை பயணத்தை தொடங்கிய அன்புமணி ராமதாஸ் கள்ளக்குறிச்சியில் இன்று காலை பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாறினாலும் மக்களின் நிலை மாறவில்லை என வேதனைத் தெரிவித்தார்.

10.5% இட ஒதுக்கீடு
வன்னியர் சமுதாய மக்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு பெறுவதற்காக பாமக எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்ததாகவும், ராமதாஸ் இல்லையென்றால் இந்த இட ஒதுக்கீடு கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், வன்னியர்களுக்காக மட்டுமல்லாமல் தமிழகத்தில் பின் தங்கியுள்ள அனைத்து சமுதாயத்துக்காகவும் பாமக போராடும் என்ற உறுதியை அன்புமணி அளித்தார்.

54 ஆண்டுகள்
54 ஆண்டுகள் காத்திருந்தது போதும் என்றும் இனியும் காத்திருக்காமல் மாற்றத்தை கொண்டு வர உழைக்கத் தொடங்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார். இந்த மாற்றம் யாரால் வரும் என்று கேட்டால், இதோ இருக்கிறானே என் தம்பி, இவரை போன்றவர்களால் மாற்றம் நிகழும் என கூட்டத்தில் நின்ற இளைஞர் ஒருவரை கை காட்டி பேசினார்.

உள்ளாட்சி அமைப்பு
அன்புமணியின் இந்தப் பேச்சுக்கு அங்கிருந்த இளைஞர்கள் வரவேற்பு தெரிவித்து பலத்த கரவொலி எழுப்பினர். நாடாளுமன்றத்துக்கு இருக்கும் அதிகாரத்தை விட உள்ளாட்சி அமைப்புகளுக்கு இருக்கும் அதிகாரம் சக்தி வாய்ந்தது என்றும் இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் பாமக வெல்ல வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications