இந்தோனேசியாவை தொடர்ந்து அந்தமானில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

Earthquake In Erode - Oneindia Tamil
நிக்கோபார்: அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடுமையான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
நேற்று மாலை இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானது. இதனால் மொத்தம் 82 பேர் பலியாகினர். இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.3 ஆக பதிவாகி இருக்கிறது.
இந்த நிலநடுக்கம் 10 கிமீ வரை உணரப்பட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
ஆனால் எந்த விதமான கட்டிட இடிபாடும் இதனால் ஏற்படவில்லை. அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. உயிரிழப்பும் இதனால் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications