ஆந்திராவை நொறுக்க வரும் பாய்லின்.. ஸ்டிரைக் செய்த அதிகாரிகள் பணிக்குத் திரும்புகிறார்கள்
ஹைதராபாத்: தெலுங்கானாவுக்கு எதிராக போராட்டம் மற்றும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள், ஆந்திராவை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் பாய்லின் புயல் காரணமாக பணிக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனராம்.
ஆந்திர மாநில அரசும் பாய்லின் புயலின் ஆபத்திலிருந்து தனது மாநில மக்களைக் காக்க அதிரடி நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
பாய்லின் புயல் தாக்கக் கூடிய பகுதிதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அரசியல் சூறாவளியிலிருந்து பாய்லின் புயலுக்கு
தெலுங்கானா என்ற அரசியல் சூறாவளியில் சிக்கித் தவிக்கும் ஆந்திர மாநிலம் தற்போது பாய்லின் புயலின் தாக்குதலை சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில்
அடுத்த 48 மணி நேரத்தில் புயல் தாக்க்க கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து புயல் தாக்கக் கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ஸ்டிரைக்கிலிருந்து பிரேக்
தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதை எதிர்த்து ஆந்திராவில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பெருமளவில் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். மின்வாரிய ஊழியர்களும் ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளதால் பல பகுதிகளில் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் புயல் வருவதால் பலர் ஸ்டிரைக்கிலிருந்து தற்காலிகமாக விலகி பணிக்குத் திரும்புகின்றனராம்.

13 மாவட்டங்களில் மின்சாரம் இல்லை
மின்வாரி ஊழியர்களின் ஸ்டிரைக் காரணமாக ஆந்திராவின் சீமாந்திரா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களிலும் மின் விநியோகம் படு மோசமாக உள்ளது. பல பகுதிகளில் மின்சாரமே இல்லை. இதனால் மருத்துவமனைகள், ரயில் போக்குவரத்து உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. பல லட்சம் பேர் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில்தான் புயல் வேறு அங்கு பீதியைக் கிளப்பியுள்ளது.

இக்கட்டான நிலையில் கை கொடுப்போம்
இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள புயல் அபாயம் காரணமாக மக்களுக்கு பாதிப்பு வராத வகையில் தற்போதைக்கு பணிக்குத் திரும்புவதாக பல வருவாய்த்துறை ஊழியர்கள், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் முழு அளவில் பணியாளர்கள் பணிக்குத் திரும்பாததால் அரசுத் தவித்துக் கொண்டிருக்கிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications