தெலுங்கானா முதல்வர் மீது அவதூறு.. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் தங்கை ஷர்மிளா மீண்டும் கைது
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை அவதூறாக பேசியதாக ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய் எஸ் ஷர்மிளா கைது
விசாகப்பட்டினம்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை அவதூறாக பேசியதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய் எஸ் ஷர்மிளா கைது செய்யப்பட்டார்.
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலன பாரதிய ராஷ்ட்ரிய சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்டை மாநிலத்தில் அதாவது ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது.

ஜெகனின் சகோதரி ஒய் எஸ் ஷர்மிளா ஒய்எஸ்ஆர்டிபி- ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் அவர் சந்திரசேகர ராவின் கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிரான விமர்சனத்தை தனது பரப்புரை மூலம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தெலுங்கானாவில் ஆளும் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்எல்ஏ குறித்து அவதூறாக பேசியதாக ஆந்திர மாநில முதல்வரின் சகோதரியான ஒய் எஸ் ஷர்மிளா மீது தெலுங்கானா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தெலங்கானா அரசுக்கு எதிராக ஷர்மிளா தொடர்ந்து பாதயாத்திரை நடத்தி வருகிறார். இதுவரை சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் அவர் தெலங்கானாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில் மகபூபாபாத் நகர் எம்எல்ஏ ஷங்கர் நாயக்கை சர்மிளா கடுமையாக விமர்சித்தார்.
இதனை எதிர்த்து ஆளுங்கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மகபூபாபாத்தில் உள்ள சர்மிளாவை தெலங்கானா போலீசார் கைது செய்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி ஒய்எஸ் ஷர்மிளாவை அங்கிருந்து ஹைதராபாத்துக்கு அனுப்பியுள்ளனர். ஷர்மிளா கைதாவது முதல் முறை அல்ல, ஏற்கனவே மூன்று முறை தெலங்கானா காவல்துறை இவரை கைது செய்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications