சந்திரபாபு நாயுடுவிடம் பல மணி நேரமாக தொடரும் விசாரணை.. ஆந்திராவில் நீடிக்கும் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

அமராவதி: விஜயவாடா மங்களகிரியில் உள்ள சிஐடி அலுவலகத்தில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் தொடர்ந்து 5 மணி நேரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆந்திர பிரதேச முதல்வராக கடந்த 2014 ம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இருந்தவர் சந்திரபாபு நாயுடு. இவர் மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

Andhra former cm Chandrababu Naidus arrest, The investigation will continue for several hours

இந்த வழக்கில் விசாரணை நடந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். காலை 6 மணிக்கு கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சந்திரபாபு நாய்டுவிடம் எஸ்ஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 5 மணி நேரம் ஆகியும் இன்னும் விசாரணை நடந்து வருகிறது. முன்னதாக ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ரத்த அழுத்தமும் சர்க்கரையின் அளவும் சீரற்ற நிலையில் இருப்பதால் அவர் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+