ஆந்திராவில் மனைவி, கள்ளக்காதலன் கொலை- வெட்டப்பட்ட தலைகளோடு போலீசில் சரணடைந்த விவசாயி
நகரி: ஆந்திராவில் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை வெட்டிக் கொலை செய்த விவசாயி, வெட்டப்பட்ட தலைகளோடு போலீசில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள கோபால பாளையத்தைச் சேர்ந்தவர் குண்டண்ணா. விவசாயியான குண்டண்ணாவின் மனைவி ஜானகியம்மா. இத்தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ஜானகியம்மாவுக்கும், அவரது உறவினரான நாராயணன் என்பவருக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை குண்டண்ணா கண்டித்துள்ளார். ஆனபோதும், கணவரின் பேச்சைக் கேட்காத ஜானகியம்மா, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள நாராயணனுடன் குடித்தனம் நடத்த தொடங்கினார்.
மனைவியின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த குண்டண்ணா, மனைவியையும், அவரது கள்ளக்காதலனையும் கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி, நேற்று வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஜானகியம்மாவையும், அவரது காதலர் நாராயணணையும் குண்டண்ணா அரிவாளால் தலையை வெட்டி கொலை செய்தார்.
பின்னர் 2 பேரின் தலைகளையும் தனித்தனியாக துணியில் கட்டி, அதனை காவடி போல் சுமந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாடேறு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார் குண்டண்ணா.
குண்டண்ணாவைக் கைது செய்த போலீசார், மேற்கொண்டு அவர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜானகியம்மா, நாராயணன் ஆகியோரின் சடலங்களைக் கைப்பற்றினர்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications