ஆந்திர எம்எல்ஏக்கள் 100 பேர் சட்டசபைக்கு மாஸ் லீவ்... ஏன்னா அவங்க கல்யாணத்துக்கு போறாங்கலாம்!

ஆந்திர சட்டசபை நடைபெற்று வரும் நிலையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 100 எம்எல்ஏக்களுக்கு மாஸ் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆந்திர எம்.எல்.ஏ.க்கள் செய்த வேலையை பாருங்கள்- வீடியோ

    ஐதராபாத் : ஆந்திர சட்டசபை நடைபெற்று வரும் நிலையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதற்காக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 100 எம்எல்ஏக்களுக்கு ஒரே நேரத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஆந்திர சட்டசபை நடைபெற்று வரும் நிலையில் ஆந்திரபிரதேசத்தின் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 100 எம்எல்ஏக்கள் சபாநாயகர் கொடெல்லா சிவபிராசாத் ராவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் வார விடுமுறையோடு சேர்த்து கூடுதலாக இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    ஆந்திராவில் அடுத்த சில தினங்களுக்கு சுமார் 1.2 லட்சம் திருமணங்கள் நடைபெற உள்ளன. இதனை காரணமாக வைத்துத் தான் எம்எல்ஏக்கள் விடுமுறை கேட்டுள்ளனர். திருமண சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியுள்ளதால் 2 நாட்கள் சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது என்றும் விடுமுறை கேட்டும் அவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    விடுமுறை அளிப்பு

    விடுமுறை அளிப்பு

    நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கிய ஆந்திர சட்டசபை 30ம் தேதியுடன் முடிவடைகிறது. மூன்றாவது வாரமாக சட்டசபை நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் மாஸ் விடுமுறை கேட்டுள்ளனர். இவர்களுக்கு சபாநாயகர் விடுமுறை அளித்துள்ளதாக தெரிகிறது.

    எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

    எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

    ஆந்திர சட்டசபையில் 176 எம்எல்ஏக்கள் உள்ளனர், இவர்கிளன் 67 பேர் எதர்க்கட்சியான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், இவர்கள் இந்தக் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணித்துள்ளனர். இப்படியான சூழலில் தான் 100 எம்எல்ஏக்கள் மாஸ் விடுமுறை போடுகின்றனர்.

    2வது முறை

    2வது முறை

    கடந்த கூட்டத் தொடரின் போதும் கூட இந்த எம்எல்ஏக்கள் ஏஜி டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாட்கள் சட்டசபை கூட்டத்தை புறக்கணித்தனர். நாட்டிலேயே அதிக சம்பளம் பெறும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆந்திர சட்டசபை உறுப்பினர்கள் தான்.

    அதிக சம்பளம் பெறும் எம் எல் க்கள்

    அதிக சம்பளம் பெறும் எம் எல் க்கள்

    கடந்த ஆண்டு அவர்களுக்கு ரூ. 95 ஆயிரத்தில் இருந்து ரூ. 1.25 லட்சம் வரை சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. இந்த சம்பள உயர்வுக்கு ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. ஏனெனில் மாநிலம் நிதிப் பற்றாக்குறையில் தவித்துக் கொண்டிருக்கும போது எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு தேவையற்றது என்று அவர்கள் தெரிவித்தனர். இதே போன்ற அவர்களுக்கான வாகன படியும் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+