கோயில் உண்டியலில்.. ரூ.100 கோடி செக் போட்ட நபர்! பேங்கில் தந்த அதிகாரிகளுக்கு ஷாக்! கடவுளுக்கே நாமம்
விசாகப்பட்டினம்: ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தின் உள்ள கோவில் ஒன்றின் உண்டியலில் நபர் ஒருவர் 100 கோடி ரூபாய்க்கு செக் போட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி கோவிலுக்கு தினம் லட்சக்கணக்கில் மக்கள் பயணம் செய்கிறார்கள். இந்தியாவில் மிகவும் பணக்கார கோவில்களில் திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அதிலும் திருப்பதி கோவில் தினம் தினம் கோடி கோடியாக வருமானம் ஈட்டும் கோவில் ஆகும். பக்தர்கள் அதிகம் விரும்பும், தினமும் பல வேண்டுதல்களை மேற்கொள்ளும் கோவிலாக திருப்பதி கோவில் உள்ளது.
கோவில் வருமானம்: இங்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை, உண்டியல் வரவு, சிறப்பு நகை வைர காணிக்கை, வரிசை கட்டணம், நிதி உதவி மூலம் பல கோடிகளை திருப்பதி ஏழுமலையான் கோவில் வருமானமாக பெற்று வருகிறது. கொரோனா காலத்தில் குறைந்திருந்த வருமானம் தற்போது மீண்டும் அங்கு அதிகரித்துள்ளது.
முக்கியமாக மக்கள் கோடி கோடியாக உண்டியலில் பணத்தை அள்ளி இங்கே கொட்டி வருகிறார்கள். இந்த கோவிலில் தினமும் 30 லட்சம் ரூபாய் வரை சில்லறை நாணயங்கள் உண்டியலில் போடப்படுகிறது. இதை தனியாக பிரித்து எண்ணுவதே மிகப்பெரிய வேலையாக உள்ளது. தினமும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உண்டியலில் அதிக அளவில் சில்லறை காசுகளை போடுகிறார்கள்.
இந்த கோவிலுக்கு சிலர் தங்கள் சொத்துக்களை எழுதிக்கொடுப்பதும் கூட வழக்கம். பலர் பல கோடிக்கு சொத்து பாத்திரங்களை தருவதும் வழக்கம்.
ஆந்திர பிரதேசம் கோவில்: இந்த நிலையில்தான் ஆந்திர பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தின் உள்ள கோவில் ஒன்றின் உண்டியலில் நபர் ஒருவர் 100 கோடி ரூபாய்க்கு செக் போட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அந்த கோவில் உண்டியலில் பக்தர் ஒருவர் ரூபாய் 100 கோடிக்கான காசோலையை காணிக்கையாக போட்டுள்ளனர். இதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவிலுக்கு இவ்வளவு பணம் வந்ததை பார்த்து அதிகாரிகள் உற்சாகமும் அடைந்து உள்ளனர். காசோலையில் இருந்து விவரங்களை சேகரித்து, பக்தரின் சேமிப்பு கணக்கு, விவரத்தை விசாரித்தபோது அவரது கணக்கில் பணம் இல்லை என்று தகவல் வந்துள்ளது.
அவரின் வங்கி கணக்கில் ரூபாய் 17 மட்டுமே இருந்ததால் அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். வங்கியிடம் இருந்து முழு விவரங்கள் பெற கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பெரும்பாலும் அந்த நபர் பொய்யாக செக் போட்டு இருக்கலாம்.
கடவுளுக்கு காணிக்கை கொடுக்க வேண்டும் என்று அவர் நினைத்து இருக்கலாம். ஆனால் அவரிடம் அவ்வளவு பணம் இருந்திருக்காது. இருந்தாலும் கடவுளுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் கொடுத்து இருக்கலாம். இதனால் அவர் அவ்வளவு பெரிய தொகையை எழுதி இருக்கலாம்.
இவ்வளவு பெரிய தொகையை கொடுக்க வேண்டும் என்பது அவரின் தனிப்பட்ட ஆசையாக, வேண்டுதலாக கூட இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரை கண்டுபிடிக்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications