ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாண் போட்டி.. தெலுங்கு தேசம் + பாஜக கூட்டணியில் வேட்பாளராகிறார்.. வெல்வரா?

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திர பிரதேச மாநிலத்தில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கூட்டணி அமைத்துள்ளது. தொகுதி பங்கீடும் சுமூகமாக முடிவடைந்துள்ள நிலையில் பிதாபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் கடந்த 2019ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அந்த கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தலைவராக உள்ளார்.

Andhra Pradesh Assembly Election 2024 Actor Pawan Kalyan announced that he will contest from the Pithapuram seat

இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலுடன் ஆந்திராவுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வரும் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் ஆந்திராவில் மும்முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளது.

அதாவது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் ஆகியவை தனித்து களமிறங்க உள்ளன. இன்னொருபுறம் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதனால் மும்முனை போட்டி நிலவ இருக்கிறது.

ஆந்திராவை பொறுத்தமட்டில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 88 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தலில் ஆந்திராவில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

இந்த 3 கட்சிகளும் தொகுதி பங்கீட்டையும் செய்துள்ளன. அதன்படி வரும் சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 141 தொகுதிகளிலும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதியிலும் போட்டியிடுவதாக தொகுதி பங்கீடு செய்துள்ளன.

இந்நிலையில் தான் வரும் சட்டசபை தேர்தலில் பிதாபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக நடிகர் பவன் கல்யாண் இன்று அறிவித்துள்ளார். இந்த தொகுதியில் பவன் கல்யாணுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இதனால் அங்கு அவர் களமிறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+