ஆந்திர பஸ் விபத்து: எரிந்த தாயின் மடியில் கருகிய நிலையில் கிடந்த குழந்தை
ஹைதராபாத்: பெங்களூரில் இருந்து ஹைதராபாத் சென்ற சொகுசு பேருந்து தீப்பிடித்ததில் 45 பேர் உடல் கருகி பலியாகினர். அந்த பேருந்தில் எரிந்து கிடந்த தாயின் மடியில் கருகிய நிலையில் கிடந்த குழந்தையை பார்த்து மீட்பு பணியினர் நொந்துவிட்டனர்.
பெங்களூரில் இருந்து தனியாருக்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்று நேற்று இரவு 10 மணிக்கு ஹைதராபாத் கிளம்பியது. பேருந்து இன்று காலை 5.10 மணிக்கு ஆந்திர மாநிலம் மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பெங்களூர்-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் பேருந்தின் டீசல் டேங்க் தீப்பிடித்து எரிந்தது.

இதில் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த 45 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். இதற்கிடையே பேருந்தின் டிரைவர், கிளீனர் மற்றும் 4 பயணிகள் பேருந்தில் இருந்து வெளியேறி உயிர் தப்பிவிட்டனர்.
பலியானவர்களில் 5 பேர் பெங்களூரில் உள்ள ஐபிம், கூகுள் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள். அவர்கள் தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாட ஹைதராபாத்துக்கு சென்றனர்.
இந்நிலையில் பேருந்தில் இருந்து 45 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்து கிடந்த உடல்களை பார்த்து மனம் நொந்தனர். அதிலும் எரிந்த நிலையில் இருந்த தாயின் மடியில் கருகிய குழந்தை கிடந்ததை பார்த்து மீட்பு படையினர் பதைத்துவிட்டனர்.
இந்த பேருந்தில் பயணம் செய்தவர்களில் 33 பேர் ஆன்லைனில் டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications