6 பேர் பலி.. ஏராளமானவர்கள் படுகாயம்.. ஆந்திரா ரயில் விபத்துக்கான ஹெல்ப் லைன் எண்கள் அறிவிப்பு
அமராவதி: ஆந்திராவில் இன்று இரவு ஒரே தண்டவாளத்தில் சென்ற விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் மற்றும் விசாகப்பட்டினம் பாலசா பயணிகள் ரயில்கள் மோதிய விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ள நிலையில் ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு இன்று பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலும் விசாகப்பட்டினம்-பாலசா பயணிகள் ரயிலும் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளி தண்டவாளத்தில் மோதி விபத்துக்குள்ளாகின.

விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயிலில் பிரேக் பிடிக்காத நிலையில் அது தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த வேளையில் அந்த தண்டவாளத்தில் விசாகப்பட்டினம்-பாலசா பயணிகள் ரயில் வந்து விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் மீது மோதியது.
இதில் 3 பெட்டிகள் தடம் புரண்டுடன. அதில் இருந்த பயணிகள் காயமடைந்து உயிருக்கு போராடினார்கள். பயணிகள், ரயில்வே போலீசார், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணியை தொடங்கினர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 30க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையில் 6 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் ஹெல்ப் லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விஜயநகரம் கலெக்டர் அலுவலகத்துக்கு 9493589157, ரயில்வே உதவி எண் 8978080006, ஹெல்ப் லைன் லேண்ட்லைன் நம்பர்களாக 0891 2746330, 08912744619, ஏர்டெல் எண்களாக 81060 53051, 8106053052, பிஎஸ்என்எல் எண்கள் 8500041670, 8500041671, ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் ஹெல்ப் லைன் எண்களாக 0674-2301625, 2301525, 2303069 அறிவிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications