அலறிய ஆந்திரா! பற்றி எரிந்த விசாகப்பட்டினம் துறைமுகம்-45 படகுகள் தீக்கிரை- காரணம் யூடியூபர்கள்!
விசாகப்பட்டினம்: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பற்றி எரிந்த பயங்கர தீயில் 45 படகுகள் தீக்கிரையாகின. ஆந்திராவை அலறவைத்த இந்த சம்பவத்துக்கு யூ டியூபர்களே காரணம் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாட்டின் முக்கியமான துறைமுகங்களில் விசாகப்பட்டினம் துறைமுகமும் ஒன்று. தொழில்துறை, பாதுகாப்பு துறை அனைத்து வகையிலும் மிக முக்கியமான துறைமுகம் விசாகப்பட்டினம்.

இத்துறைமுகத்தில் மீன்பிடி படகுகள் நிறுத்தப்பட்ட இடத்தில் பயங்கர தீ பரவியது. இந்த தீ மளமளவென பரவியதில் நிறுத்தப்பட்டிருந்த 45 படகுகள் தீயில் கொழுந்துவிட்டு எரிந்து தீக்கிரையாகின. இதில் 36 படகுகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. 9 படகுகள் மட்டும் ஓரளவு பாதிக்கப்பட்டிருந்தன. ஆந்திரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த சம்பவம்.
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தீ விபத்தில் 45 படகுகள் எரிந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர்தான் இந்த தீ விபத்துக்கு காரணமே யூ டியூபர்கள் என தெரியவந்துள்ளது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பாலாஜி என்பவரது படகில் மது விருந்து நடைபெற்றிருக்கிறது. இந்த விருந்தில் யூ டியூபர்கள் பங்கேற்றிருக்கின்றனர். அவர்களிடையே பணத்தை பங்கு போடுவதில் பிரச்சனை வெடித்திருக்கிறது.
இதனால் மதுபோதையில் இருந்த சிலர் அங்கிருந்த படகுகளுக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடி இருக்கின்றனர். இதனால் அங்கிருந்த படகுகளுக்கு அடுத்தடுத்து தீ பற்றி 45 படகுகள் நாசமாகின என்பது தெரியவந்துள்ளது. யூ டியூபர்களிடையேயான மோதல்தான் தீ விபத்துக்கு காரணம் என்பது ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக ஆந்திரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய போதை ஆசாமிகள், யூ டியூபர்களை வலை வீசி போலீசார் தேடி வருகின்றனர்.
இதனிடையே விசாகப்பட்டினம் துறைமுகத்தில் படகுகள் எரிந்த இடத்தை அமைச்சர் சீதிரி அபல்ராஜூ நேரில் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சீதிரி, எரிந்த படகுகளுக்கு இழப்பீடாக 80% தொகை வழங்கப்படும். படகுகள் எரிந்ததால் பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு அரசு உதவும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications