ஆந்திரா: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் யாக சாலையில் திடீர் தீ விபத்து
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. யாகசாலையில் நடந்த பூஜையின் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீகாளஹஸ்தி: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக யாக சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் கடந்த 2010-ம் ஆண்டு இடிந்து விழுந்தது. இதனையடுத்து புதிய ராஜகோபுரம் கட்டும் பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்தது. பணிகள் நிறைவடைந்ததையொட்டி வரும் 8-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதற்காக கோயிலில் உள்ள யாக சாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று காலை வழக்கம்போல யாக பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் வேகமாக பரவிய தீயால் அப்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் 3 தண்ணீர் லாரிகளின் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் ஏராளமான சிவாச்சாரியார்களுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். யாகசாலையில் நடந்த பூஜையின் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications