திருப்பதியில் செம்மரக் கடத்தல் கும்பல் மீது துப்பாக்கிச் சூடு.. தமிழர் ஒருவர் கைது
திருப்பதி அருகே செம்மரம் வெட்டியதாக தமிழர் ஒருவரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பதி: திருப்பதி அருகே ஸ்ரீ வாரி மெட்டு வனப்பகுதியில் செம்மரம் வெட்டியவர்களை பிடிப்பதற்காக அதிரடிப்படை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
திருப்பதி அருகே உள்ள ஸ்ரீ வாரி மெட்டு வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து செம்மரக் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிரடிப்படை போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது கடத்தல் கும்பல் ஒன்று செம்மரம் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதனிடையே போலீசார் வருவதை பார்த்த அந்தக் கும்பல் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. தாக்குதலைத் தொடர்ந்து அதிரடிப்படை போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கி சூடு நடத்தியதால் கடத்தல் கும்பல் அங்கியிருந்து தப்பியோடியது.
மேலும் கடத்தலில் ஈடுபட்டதாக திருப்பத்தூரைச் சேர்ந்த ஒருவரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவரிடம் இருந்து ரூ 15 லட்சம் மதிப்புள்ள 12 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications