கோவில் விழாவில் பங்கேற்ற யானைக்கு மதம் பிடித்தது... வாகனங்கள் துவம்சம்
பாலக்காடு: கேரளமாநிலம் பாலக்காடு அருகேயுள்ள கோங்காட் என்ற இடத்தில் கோவில் விழாவில் பங்கேற்ற யானை ஒன்றுக்கு மதம் பிடித்தது. இதனால் தாறுமாறாக ஓடிய அந்த யானை அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை துவம்சம் செய்தது. ஆட்டோக்களை கோபத்துடன் தூக்கி வீசியதை, பார்த்த மக்கள் அச்சத்தில் உறைந்து போயினர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாட்டம் ஒத்தப்பாலம் அருகே பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. நேற்று மாலை, 4 மணியளவில் நடந்த யானைகளின் அணிவகுப்பின் போது, ஒருயானை, திடீரென மிரண்டது. வெறித்தனமாக அங்கும் இங்கும் ஒடியது. இதைக்கண்ட மக்கள் மிரண்டு அருகில் இருந்த இடங்களில் பதுங்கினர்.
{ventuno}
கோபம் கொண்ட யானை சாலை ஓரம் நின்ற ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகிய வாகனங்களை தந்தத்தால் குத்தி தூக்கி வீசியது. அப்போது யானை மீது 2 பேர் அமர்ந்து இருந்தனர். அவர்களால் கீழே இறங்க முடியவில்லை. இருவரும் கெட்டியாக பிடித்துக் கொண்டனர். அந்த நேரத்தில் மற்ற 10 யானைகளும் பத்திரமாக வேறு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டன.
வெறித்தனமாக ஓடிய யானை, ஒரு இருசக்கர வாகனத்தை துாக்கி வீசி நொறுக்கியது. தும்பிக்கையில் கிடைத்த ஆட்டோக்களை தூக்கி எறிந்தது. யானை நடத்திய இந்த தாக்குதலில் 27 வாகனங்கள் சேதமடைந்தன.
தகவல் அறிந்து வந்த கால்நடை மருத்துவர் தலைமையிலான படையினர், மயக்க ஊசிப்போட்டு மதம் பிடித்த யானையை அமைதிப்படுத்தினர். 4 மணிநேரம் கழித்தே அந்த யானை இயல்பு நிலைக்கு திரும்பியது. கோவில் விழாவில் பங்கேற்ற யானை திடீரென ஆவேசம் வந்து வாகனங்களை சேதப்படுத்திய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications