நீரவ் மோடி மீது செம காண்டில் இருக்கும் மும்பைவாலாக்கள்... ஹோலிக்கு என்ன செய்யப்போகிறார்கள் தெரியுமா?
ஹோலி பண்டிகையின் போது வங்கியில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய தொழிலதிபர் நீரவ் மோடியின் உருவபொம்மையை எரிக்க மும்பை பகுதி மக்கள் திட்டமிட்டுள்ளனர்.
மும்பை: மும்பையின் வொர்லி பகுதியைச் சேர்ந்த பிடிடி குடியிருப்பு வாசிகள் ஹோலி பண்டிகையின் போது தொழிலதிபர் நீரவ் மோடியின் 58 அடி உயர உருவபொம்மையை எரிக்க முடிவு செய்துள்ளனர். ஹோலியின் போது கெட்ட விஷயங்கள் வெளியேறுவதை உணர்த்தும் விதமாக இதனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
மும்பையின் வொர்லி பகுதியைச் சேர்ந்த பிடிடி சாவல் குடியிருப்பு பகுதி மக்கள் சேர்ந்து 58 அடி உயர தொழிலதிபர் நீரவ் மோடியின் உருவபொம்மையை உருவாக்கியுள்ளனர். ஹோலி பண்டிகையை இந்த ஆண்டு வித்தியாசமான முறையில் கொண்டாடும் விதமாக இந்த உருவபொம்மையை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஹோலியின் போது கெட்ட விஷயங்களை அகன்று நல்ல விஷயங்கள் அனைவர் வாழ்விலும் ஏற்பட வேண்டும் என்று மக்கள் வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இதே போன்று மரத்துண்டுகளை எரிய விட்டு அதில் தீய விஷயங்கள் அழித்தொழிக்கப்படுவதாக நம்புகின்றனர்.
கடந்த 8 ஆண்டுகளாக சாவல் குடியிருப்பு வாசிகள் சமூக பிரச்னை ஒன்றை முன்நிறுத்தி ஹோலி பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டும் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, குறைவான எடை கொண்ட மரத்துண்டு மற்றும் காய்ந்த சறுகுகளை வைத்து நீரவ்மோடியின் உருவபொம்மையை உருவாக்கியுள்ளனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியை மோசடி செய்து ரூ.11 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு தொழிலதிபர் நீரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார். நாட்டிற்கே பெரும் அவமானத்தை ஏற்படுத்திய நீரவ் மோடி ஒரு தீயசக்தி என்பதை பிரதிபலிக்கும் விதமாக இந்த வித்தியாசமான ஹோலியை கொண்டாடுகின்றனர். லிம்கா சாதனை புத்தகத்திலும் இதனை இடம்பெறச் செய்ய பிடிடி சாவல் மக்கள் திட்டமிட்டுள்ளனர். நாட்டிலேயே தாங்கள் கொண்டாடும் ஹோலி தான் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications