டெல்லி துணை நிலை ஆளுநராக அனில் பைஜால் பதவியேற்பு.. விழாவில் கேஜ்ரிவால் பங்கேற்பு
டெல்லி: டெல்லி துணை நிலை ஆளுநராக அனில் பைஜால் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். டெல்லியில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் அனில் பைஜாலுக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹினி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
டெல்லி துணை நிலை ஆளுநராக மூன்றரை ஆண்டுகாலம் இருந்தவர் நஜீப் ஜங். ஆம் ஆத்மி அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்த அவர் 22ம் தேதி திடீரென தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து புதிய துணை நிலை ஆளுநரை தேர்ந்தெடுக்க மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தியது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அனில் பைஜால் (70) அந்த பொறுப்புக்கு கடந்த சில தினங்களுக்கு முன் நியமனம் செய்யப்பட்டார். இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து இன்று டெல்லி துணை நிலை ஆளுநராக அனில் பைஜால் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். டெல்லியில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் அனில் பைஜாலுக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹினி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இந்த நிகழ்வில் பங்கேற்றார். டெல்லியின் 21வது துணை நிலை கவர்னர் அனில் பைஜால் ஆவார்.
1969ம் ஆண்டு 'பேட்ச்' ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனில் பைஜால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் மத்திய உள்துறை செயலாளராக இருந்தார். மன்மோகன் சிங் ஆட்சியில் ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்துவதில் அனில் பைஜால் முக்கிய பங்காற்றியவர். 2006ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க சான்ஸ்.. டெல்லி சோகம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications