"10 ஆயிரம் கொடுத்தா என்ன வேண்டுமானாலும் செய்வேன் நினைச்சியா!" உடலுறவுக்கு அழைத்த ஓனர்! சீறிய அங்கிதா
ஹரித்துவார்: உத்தரகண்ட் ரிசார்ட் வரவேற்பாளர் கொலையில் சில அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் முன்பு பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் வினோத் ஆர்யா. முன்னாள் அமைச்சரான இவரது மகன் புல்கித் ஆர்யா பௌரி மாவட்டத்தில் ரிசார்ட் ஒன்றை வைத்து இருந்தார்.
அந்த ரிசார்ட்டில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தவர் 19 வயதான அங்கிதா பண்டாரி. ரிசார்ட் சென்று இருந்த அவர், கடந்த வாரம் திடீரென மாயமாகிவிட்டார்.

மாயம்
பல பகுதிகளில் அவரை தேடிய அவரது பெற்றோர், இறுதியில் போலீசில் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், போலீசார் முதலில் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்போது அங்கிதா பண்டாரியின் பெற்றோர் உருக்கமாக வெளியிட்ட சோஷியன் மீடியாவில் டிரெண்டானது. அதில் அவர்கள் புல்கித் ஆர்யா தான் தங்கள் மகள் மாயமானதற்குக் காரணம் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர்.

கொலை
போலீசார் விசாரணையில், ரிசார்ட்டில் பணிபுரிந்த இருவரின் உதவியுடன் அங்கிதாவை புல்கித் ஆர்யா கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து புல்கித் ஆர்யா உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்கள் அழைத்துச் செல்லும்போது, போலீஸ் வாகனத்தை இடைமறித்து பொதுமக்கள் குற்றவாளிகளை சரமாரியாகத் தாக்கினர். அங்கிதாவின் உடலும் அருகே இருந்த கால்வாயில் மீட்கப்பட்டது.

என்ன நடந்தது
தன்னுடனும் ரிசார்ட்டிற்கு வரும் விருந்தினர்கள் உடனும் உடலுறவு கொள்ள வேண்டும் என்று அங்கிதாவை ரிசார்ட் உரிமையாளரான புல்கித் ஆர்யா மிரட்டி உள்ளார். இருப்பினும், இதற்கு அவர் மறுக்கவே, இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் கடந்த செப். 18ஆம் தேதி அங்கிதா கொல்லப்பட்டு உள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனிடையே அங்கிதா அவரது நண்பருக்கு அனுப்பிய சில முக்கிய வாட்ஸ்அப் மெசேஜ்களின் ஸ்கிரீன் ஷாட்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாட்ஸ்அப்
அப்படித்தான் அங்கிதா தனது நண்பருக்கு அனுப்பிய வாட்ஸ்ப் மெசெஜில், "ஏழையாக இருப்பதால் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் என்னை நானே விற்றுவிடுவேன் என நினைக்கிறயா என நான் அவனிடம் கேட்டேன். இந்த ரிசார்ட்டில் இருக்கவே எனக்குப் பயமாக இருக்கிறது. நான் மிகவும் பாதுகாப்பற்றதாக உணர்கிறேன்" என்று அவர் தெரிவித்து உள்ளார். அவர் இந்த மெசேஜ்ஜை அனுப்பிய சில நாட்களில் அவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்குத.

ரிசார்ட் இடிப்பு
இந்தச் சம்பவம் கடந்த வாரம் விஸ்வரூபம் எடுத்தது. குற்றவாளியின் தந்தை வினோத் ஆர்யா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் கொலை செய்த புல்கித் ஆர்யாவுக்கு சொந்தமான அந்த ரிசார்ட் விதிகளைப் பின்பற்றிக் கட்டப்படவில்லை என்று கூறி, அன்று இரவே ரிசார்ட் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் இதுவரை புல்கித் ஆர்யா உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றச்சாட்டு
அதேநேரம் ஆதாரங்களை அழிக்கும் விதமாகவே ரிசார்ட்டை அவசர அவசரமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டு உள்ளதாக அங்கிதாவின் பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்!












Click it and Unblock the Notifications