மோடிக்கு தான் பிரதமர் என்ற 'ஈகோ'... அன்னா ஹசாரே பொளேர்!
நரேந்திர மோடிக்கு தான் பிரதமர் என்ற அகந்தை இருப்பதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பை : மக்கள் பிரச்னைக்காக தான் இதுவரை எழுதிய 30 கடிதங்களில் ஒன்றிற்கு கூட இந்த 3 ஆண்டுகளில் பிரதமர் பதில் அளிக்கவில்லை என்றும் அவருக்கு தான் பிரதமர் என்ற அகந்தையே அதிகம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்.
ஊழலுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் சங்லி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் மோடிக்கு தான் பிரதமர் என்ற அகந்தை இருப்பதாக கூறினார்.

"மக்கள் பிரச்னைகள் தொடர்பாக நான் இதுவரை பிரதமர் நரேந்திர மோடிக்கு 3 ஆண்டுகளில் 30 கடிதங்களை எழுதியுள்ளேன். ஆனால் அவர் ஒரு கடிதத்திற்குக் கூட பதில் எழுதவில்லை, ஏனெனில் அவருக்கு தான் பிரதமர் என்ற அகந்தை இருக்கிறது" என்றார்.
மேலும் மார்ச் 23ம் தேதி முதல் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஹசாரே அறிவித்தார். இந்த போராட்டத்திற்கான ஆதரவு திரட்டும் பயணத்தை நேற்றைய பொதுக்கூட்டத்தில் இருந்து சாரே தொடங்கியுள்ளார்.
மார்ச் 23ம் தேதி நடக்கப் போகும் போராட்டமானது இதுவரை டெல்லி கண்டிராத போராட்டமாக இருக்கும். என்னுடைய பொதுக்கூட்டம், போராட்டங்கள் மூலம் வாக்காளர்களை ஈர்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. லோக்பால் மசோதாவிற்காக மக்கள் எத்தகைய அளவில் கூடி ஆதரவளித்தனரோ அதே போன்று விவசாயிகள் பிரச்னைக்காக நடத்தப்படும் கூட்டத்திற்கும் தங்களது ஆதரவை தெரிவிப்பார்கள் என்று ஹசாரே கூறியுள்ளார்.
லோக்பால் மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும், லோக்அயுக்தா நிறுவ வேண்டும், விவசாசிகளுக்கு ரூ. 5 ஆயிரம் பென்ஷன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் நிறுத்தியே தன்னுடைய போராட்டம் என்று அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications