சிறந்த சட்டங்களை முறையாக அமல்படுத்தாவிட்டால் போராட்டம்: அன்னா ஹசாரே
மும்பை: கிராம பஞ்சாயத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட சிறந்த சட்டங்களை முறையாக அமல்படுத்தாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவேன் என மராட்டிய முதல்வர் பிரிதிவிராஜ் சவானுக்கு அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.
தொடர்ந்து ஊழலுக்கு எதிராக போராடி வரும் காந்தியவாதியான அன்னா ஹசாரே, மராட்டிய முதல்வர் பிரிதிவிராஜ் சவானுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கிராம பஞ்சாயத்துகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது, அரசு பணியாளர்களை இடமாற்றம் செய்யும் விவகாரம் போன்றவற்றில் கொண்டு வரப்பட்ட சட்டங்களை மராட்டிய அரசு முறையாக அமல்படுத்தவில்லை. கிராம வளர்ச்சி மூலமே நாட்டு வளர்ச்சியை காண முடியும் என்று மகாத்மா காந்தி கூறினார். இதனால் சட்டசபை, நாடாளுமன்றத்தை விட கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அரசு பணியாளர்கள் இடமாற்ற பிரச்சினையில் 2006ம் ஆண்டு நீண்ட போராட்டத்துக்கு பிறகு சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின்படி அவசியமின்றி அரசு பணியாளர்களை 3 ஆண்டுகள் வரை இடமாற்றம் செய்ய முடியாது. ஆனால் அந்த சட்டத்தின்படி தற்போது யாரும் நடக்கவில்லை.அமைச்சர்களின் விருப்பப்படி இடமாற்றம் நடக்கிறது.
சிறந்த சட்டங்கள் நடைமுறையில் இருந்தும் அவற்றை அமல்படுத்த அரசு தவறி வருகிறது. சட்டங்களை முறையாக அமல்படுத்தாததால் பொதுமக்கள் தாங்கி கொள்ள முடியாத அளவுக்கு லஞ்சம், ஊழல் மலிந்து காணப்படுகிறது. இந்த நிலையில் மேற்கண்ட சட்டங்களை முறையாக அமல்படுத்தும்படி உங்களது நினைவுக்கு கொண்டு வருகிறேன். இதன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலம் தழுவிய மக்கள் போராட்டம் நடைபெறும்' என இவ்வாறு தனது கடிதத்தில் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications